கடத்தப்பட்ட வீரரை விடுவித்த நக்சல்கள்

Added : ஏப் 08, 2021 | கருத்துகள் (1)
Share
Advertisement
ராய்ப்பூர்:சத்தீஸ்கரில் கடத்தப்பட்ட பாதுகாப்புப் படை வீரரை,நக்சல்கள் நேற்று விடுவித்தனர்.சத்தீஸ்கரில், முதல்வர் பூபேஷ் பாஹெல் தலைமையிலான, காங்., ஆட்சி நடக்கிறது.இங்குள்ள பிஜாப்பூர் - சுக்மா எல்லையில், சமீபத்தில், சி.ஆர்.பி.எப்., வீரர்களுக்கும், நக்சல்களுக்கும் இடையே நடந்த துப்பாக்கிச் சண்டையில், 22 வீரர்கள் வீர மரணம் அடைந்தனர்.இந்த சண்டையின்போது, சி.ஆர்.பி.எப்., வீரர்
 கடத்தப்பட்ட வீரரை விடுவித்த நக்சல்கள்

ராய்ப்பூர்:சத்தீஸ்கரில் கடத்தப்பட்ட பாதுகாப்புப் படை வீரரை,நக்சல்கள் நேற்று விடுவித்தனர்.

சத்தீஸ்கரில், முதல்வர் பூபேஷ் பாஹெல் தலைமையிலான, காங்., ஆட்சி நடக்கிறது.இங்குள்ள பிஜாப்பூர் - சுக்மா எல்லையில், சமீபத்தில், சி.ஆர்.பி.எப்., வீரர்களுக்கும், நக்சல்களுக்கும் இடையே நடந்த துப்பாக்கிச் சண்டையில், 22 வீரர்கள் வீர மரணம் அடைந்தனர்.இந்த சண்டையின்போது, சி.ஆர்.பி.எப்., வீரர் ராகேஷ்வர் சிங் மன்ஹாஸ் என்பவரை, நக்சல்கள் கடத்திச் சென்றனர்.

அவரது புகைப்படத்தை, நேற்று முன்தினம் வெளியிட்ட நக்சல்கள், 'வீரரை திரும்ப அனுப்ப வேண்டுமானால், எங்களுடன் பேச்சு நடத்த, மத்தியஸ்தர்களை அரசு அனுப்பவேண்டும்' என்ற நிபந்தனையை முன்வைத்தனர்.இதையடுத்து, அந்த வீரரை மீட்கும் பணியில், மாநில அரசு முழு வீச்சில் இறங்கியது.

இந்நிலையில், கடத்தப்பட்ட ராகேஷ்வர் சிங்கை, நக்சல்கள் விடுவித்தனர். இதை, சத்தீஸ்கர் போலீசார் உறுதிபடுத்தினர்.இதையடுத்து, தன் மகிழ்ச்சியை வெளிப்படுத்திய வீரரின் மனைவி மீனு, ''என் கணவர் விடுவிக்கப்பட்டுள்ளார். எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. அரசுக்கு என் நன்றி,'' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
தமிழவேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
09-ஏப்-202122:40:20 IST Report Abuse
தமிழவேல் கவர்ன்மெண்ட் கிட்டே காசு கரந்திருப்பானுவோ...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X