பொது செய்தி

இந்தியா

ரபேல் ஒப்பந்தத்தில் விதி மீறல் இல்லை - டசால்ட் நிறுவனம்

Updated : ஏப் 08, 2021 | Added : ஏப் 08, 2021 | கருத்துகள் (19)
Share
Advertisement
புது டில்லி: “இந்தியாவுக்கு 36 ரபேல் போர் விமானங்களை வழங்குவதற்கான ஒப்பந்தம் ஏராளமான காசோலைகள் மூலமாகவே நடந்தது, அதில் எந்த விதிமீறலும் பதிவாகவில்லை” என பிரான்ஸின் ரபேல் தயாரிப்பு நிறுவனமான டசால்ட் அறிக்கை வெளியிட்டுள்ளது. பிரான்சிடம் இருந்து நம் விமானப் படைக்கு, 36 ரபேல் போர் விமானங்கள் வாங்க, 59 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள ஒப்பந்தம், 2016ல் கையெழுத்தானது.

புது டில்லி: “இந்தியாவுக்கு 36 ரபேல் போர் விமானங்களை வழங்குவதற்கான ஒப்பந்தம் ஏராளமான காசோலைகள் மூலமாகவே நடந்தது, அதில் எந்த விதிமீறலும் பதிவாகவில்லை” என பிரான்ஸின் ரபேல் தயாரிப்பு நிறுவனமான டசால்ட் அறிக்கை வெளியிட்டுள்ளது.



latest tamil news



பிரான்சிடம் இருந்து நம் விமானப் படைக்கு, 36 ரபேல் போர் விமானங்கள் வாங்க, 59 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள ஒப்பந்தம், 2016ல் கையெழுத்தானது. அதற்கு முன்னர் காங்., ஆட்சியில் 2012-ல் 126 ரபேல் விமானங்களை வாங்குவதற்கு பேச்சுவார்த்தை நடந்தது. ஆனால் ஒப்பந்தம் முடிவாகவில்லை. அந்த பேச்சுவார்த்தையில் 18 விமானங்களை பறக்கும் நிலையிலும், மீதம் 108 விமானங்களை இந்திய பொதுத் துறை நிறுவனமான இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் தயாரிப்பது எனவும் முடிவு செய்திருந்தனர்.

பின்னர் ஆட்சிக்கு வந்த மோடி தலைமையிலான பா.ஜ., அரசு 36 ரபேல் விமானங்களை மட்டும் முழுமையான திறனுடன் பறக்கும் நிலையில் வாங்க ஒப்பந்தம் போட்டது. இதன் விலை 126 விமானங்களுக்கு பேசப்பட்ட விலையை விட அதிகம் எனவும், அதனால் ஊழல் நடந்திருக்கிறது எனவும் அப்போதைய காங்., தலைவர் ராகுல் பிரச்னையை கிளப்பினார்.

விமானங்களை வழங்க எச்.ஏ.எல்., நிறுவனத்துக்கு டசால்ட் நிறுவனத்தை விட 2.7 மடங்கு வேலை ஆட்கள் நேரம் அதிகம் தேவைப்படுவதால், பிரான்ஸ் நிறுவனிடமே ஒப்பந்தம் போட்டதாக அரசு விளக்கமளித்தது. சி.ஏ.ஜி.,யும் ஒப்பந்தத்தில் எந்த ஊழலும் காணப்படவில்லை என்றது. இப்பிரச்னை ஓராண்டாக ஓய்ந்திருந்த நிலையில், பிரான்ஸ் ஊடகம் ஒன்று, டசால்ட் நிறுவனம் இந்தியாவைச் சேர்ந்த ஆயுத இடைத் தரகர் சுஷேன் குப்தாவின் நிறுவனமொன்றிற்கு பரிசு என்ற வகையில் ரூ.4.31 கோடி வழங்கியதாக கூறியது.


latest tamil news



இந்நிலையில் டசால்ட் நிறுவனம் இன்று ஒரு அறிக்கை வெளியிட்டது. அதில் கூறியிருப்பதாவது: 2000-களின் முற்பகுதியில் இருந்து, டசால்ட் ஏவியேஷன் ஊழலைத் தடுக்க கடுமையான வழிமுறைகளை நடைமுறைப்படுத்தி வருகிறது. தொழில்துறை மற்றும் வணிக உறவுகளில் நிறுவனத்தின் நேர்மை, நெறிமுறைகள் மற்றும் நற்பெயருக்கு உத்தரவாதம் அளிக்கிறது. ஊழல், செல்வாக்குகளை பயன்படுத்துவதை தடுப்பதற்கும் தனது அமைப்பை பலப்படுத்தியுள்ளது.

36 ரபேல் விமானங்களை கையகப்படுத்த இந்தியாவுடன் போடப்பட்ட ஒப்பந்தம் இரண்டு அரசுகளுக்கு இடையிலானது. இந்த ஒப்பந்தம் மற்றும் ஏற்றுமதி ஒப்பந்தம் அனைத்தும் விதிமுறைகளை பூர்த்தி செய்கின்றன. அரசு மற்றும் தொழில் கூட்டாளிகளிடையே முழு வெளிப்படைத்தன்மையுடன் செயல்படுத்தப்படுகின்றன. என கூறியுள்ளனர்.

Advertisement




வாசகர் கருத்து (19)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
09-ஏப்-202115:30:00 IST Report Abuse
ஆப்பு 4 கோடி யெல்லாம் ஒர் ஊழலா? ஃப்ரெஞ்சுக் காரனுக்கே இன்சல்ட்டா இருந்திருக்கும்.
Rate this:
Cancel
ராஜவேலு ஏழுமலை (ஜாதி மத அரசியலை எதிர்ப்போம்.) ஊழல் நடக்கலைன்னு உரக்க சொல்லும்போதே சந்தேகம் அதிகமாகுது.
Rate this:
N.K - Hamburg,ஜெர்மனி
09-ஏப்-202114:29:34 IST Report Abuse
N.K ஒரிஜினலா ஊழல் பண்றவங்க எல்லாம் கமுக்கமா இருப்பாங்க கருணாநிதி மாதிரி...
Rate this:
Cancel
துயில் விரும்பி - coimbatore,இந்தியா
09-ஏப்-202110:39:26 IST Report Abuse
துயில் விரும்பி திருட்டு பசங்கள திருத்தவும் முடியாது திருத்தவும் போறதில்லை...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X