நாளை முதல் இயங்குகிறது பெங்களூரு டபுள் டெக்கர்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

நாளை முதல் இயங்குகிறது பெங்களூரு 'டபுள் டெக்கர்'

Added : ஏப் 08, 2021
Share
திருப்பூர்:கோவையில் இருந்து, பெங்களூருவுக்கு,மீண்டும் 'டபுள் டெக்கர்' ரயில், நாளை முதல் இயக்கப்படுகிறது.கோவையில் இருந்து திருப்பூர், ஈரோடு, சேலம் வழியாக, பெங்களூருவுக்கு உதய், 'டபுள் டெக்கர்' எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கப்பட்டது. குளிர்சாதன வசதி உடைய, இந்த இரண்டடுக்கு ரயில், பயணிகள் மத்தியில் வரவேற்பை பெற்றது. ஊரடங்கால் நிறுத்தப்பட்ட, இந்த ரயில் சேவை நாளை முதல்

திருப்பூர்:கோவையில் இருந்து, பெங்களூருவுக்கு,மீண்டும் 'டபுள் டெக்கர்' ரயில், நாளை முதல் இயக்கப்படுகிறது.

கோவையில் இருந்து திருப்பூர், ஈரோடு, சேலம் வழியாக, பெங்களூருவுக்கு உதய், 'டபுள் டெக்கர்' எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கப்பட்டது. குளிர்சாதன வசதி உடைய, இந்த இரண்டடுக்கு ரயில், பயணிகள் மத்தியில் வரவேற்பை பெற்றது. ஊரடங்கால் நிறுத்தப்பட்ட, இந்த ரயில் சேவை நாளை முதல் மீண்டும் துவங்குகிறது.

காலை, 5:45 மணிக்கு கோவையில் புறப்படும் ரயில், மதியம், 12:40க்கு பெங்களூரு சென்றடையும். அங்கிருந்து மதியம், 2:15க்கு புறப்பட்டு, இரவு, 9:00 மணிக்கு கோவை வந்து சேரும். வாரத்தில் புதன் தவிர மற்ற ஆறு நாட்கள், இந்த ரயில் இயங்கும் என, தெரிவிக்கப் பட்டு உள்ளது. நாளை முதல் கோவை - சென்னை சதாப்தி சூப்பர் பாஸ்ட், கொச்சுவேலி - பனஸ்வாடி ஹிம்சாகர் எக்ஸ்பிரஸ் ரயில்கள் இயங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

ரயில்வே அதிகாரிகள் கூறுகையில், 'டபுள்டெக்கர் ரயிலில் பயண நேரம், கட்டணம் மாறுபடும். திருப்பூர், ஈரோடு, சேலம், குப்பம், கிருஷ்ணராஜபுரத்தில் மட்டும், இந்த ரயில் நிற்கும்' என்றனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X