கூடலுார்:மயக்க ஊசி செலுத்தி பிடிக்கப்பட்ட காட்டு யானை, முதுமலை வனப் பகுதியில் விடப்பட்டது.
தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் அருகே, நெருப்பூர் வனப் பகுதியில் முகாமிட்ட, 15 வயதுடைய ஆண் காட்டு யானை, இரு வாரங்களாக ஊருக்குள் நுழைந்து, விவசாய பயிர்களை சேதப்படுத்தியதுடன், மக்களையும் அச்சுறுத்தி வந்தது. நேற்று முன்தினம், வனத் துறையினர், மயக்க ஊசி செலுத்தி யானையை பிடித்தனர்.நேற்று அதிகாலை, 4:30 மணிக்கு, நீலகிரி மாவட்டம், முதுமலை சீகூர் வனச்சரகம் அசுவராமட்டம் வனப் பகுதிக்கு கொண்டு வரப்பட்டது.
கால்நடை டாக்டர்கள் பரிசோதனை செய்து, மயக்கம் தெளிய ஊசி செலுத்தினர். காலை, 7:15க்கு, யானை வனப் பகுதியில் விடுவிக்கப்பட்டது.துணை இயக்குனர் ஸ்ரீகாந்த் கூறுகையில், ''யானை நல்ல ஆரோக்கியத்துடன் உள்ளது. அதன் நடமாட்டம் தொடர்ந்து கண்காணிக்கப் படும்,'' என்றார்.ஊர்மக்கள் கூறுகையில், 'வேறு பகுதியில் பிடிக்கப்படும் காட்டு யானைகள், தொடர்ந்து முதுமலையில் விடப்படுவதால், அவை ஊருக்குள் நுழைந்து மக்களை தாக்க வாய்ப்புஉள்ளது' என்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE