கிணத்துக்கடவு;கிணத்துக்கடவு அடுத்துள்ள சங்கராயபுரம் செல்லும் ரோட்டில், சிறுபாலத்தை ஒட்டியுள்ள குழியால், வாகனங்கள் தடுமாறி விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது.முத்துக்கவுண்டனுார் பிரிவு முதல் சங்கராயபுரம் செல்லும் தார்ரோட்டில், மயானம் முன்பாக சிறுபாலம் உள்ளது. இதனை ஒட்டி குடிநீர் குழாய் செல்கிறது. இக்குழாயில் ஏற்பட்ட கசிவினை சரிசெய்ய, குழி தோண்டி பழைய குழாய் எடுக்கப்பட்டுள்ளது. புதிதாக குழாய் பொருத்தும் பணி நிலுவையாக உள்ளதால், குழிக்காக எடுக்கப்பட்ட மண் ரோட்டின் பாதி வரை கொட்டப்பட்டுள்ளது.இவ்வழியாக வரும் வாகனங்கள் இக்குழிக்குள் சிக்கி விபத்துக்குள்ளாகும் அபாயம் உள்ளது. மேலும், இரவு நேரங்களில் இருசக்கர வாகனங்கள் தடுமாறி குழிக்குள் விழுந்துவிடும் அபாயமும் உள்ளது. இதனைத் தவிர்க்க, விரைவில் குழாய் பதித்து, குழியை மூட 10 நெ. முத்துார் ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பொதுமக்கள் வேண்டுகேள் விடுத்துள்ளனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE