சம்பவம் செய்தி

தமிழ்நாடு

முன்விரோதத்தில் 2 பேர் கொலை: 4 பேர் கைது

Added : ஏப் 08, 2021
Share
Advertisement
அரக்கோணம்:தேர்தல் முன்விரோதத்தால் அரக்கோணம் அருகே இருவர் கொலை செய்யப்பட்டனர். இது தொடர்பாக, நான்கு பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம் அடுத்த பெருமாள் ராஜபேட்டையில், நேற்று முன்தினம் இரவு, 10:00 மணிக்கு சோகனுா‍ரை சேர்ந்த சூர்யா, 24 அர்ஜுன், 21 சவுந்திரராஜன், 26 மதன், 27 ஆகியோர் மது குடித்தனர். அங்கு வந்த பெருமாள் ராஜபேட்டையை சேர்ந்த, 10 பேரும் மது
 முன்விரோதத்தில் 2 பேர் கொலை: 4 பேர் கைது

அரக்கோணம்:தேர்தல் முன்விரோதத்தால் அரக்கோணம் அருகே இருவர் கொலை செய்யப்பட்டனர். இது தொடர்பாக, நான்கு பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம் அடுத்த பெருமாள் ராஜபேட்டையில், நேற்று முன்தினம் இரவு, 10:00 மணிக்கு சோகனுா‍ரை சேர்ந்த சூர்யா, 24 அர்ஜுன், 21 சவுந்திரராஜன், 26 மதன், 27 ஆகியோர் மது குடித்தனர். அங்கு வந்த பெருமாள் ராஜபேட்டையை சேர்ந்த, 10 பேரும் மது குடித்தனர். அப்போது, அவர்களுக்குள் தேர்தல் குறித்து வாக்குவாதம் ஏற்பட்டு, ஒருவரை ஒருவர் கத்தி, பீர் பாட்டிலால் குத்திக் கொண்டனர்.

இதில், சோகனுாரை சேர்ந்த சூர்யா, அர்ஜுன், ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். சவுந்தரராஜன், மதன் ஆகியோர் படுகாயமடைந்தனர். அவர்கள், திருத்தணி அரசு மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டனர்.மறியல்சோகனுாரை சேர்ந்த, 200க்கும் மேற்பட்டோர், பெருமாள் ராஜபேட்டை கிராமத்தில் புகுந்து டிராக்டர் மற்றும் 100 நெல் மூட்டைகளுக்கு தீ வைத்தனர். இதனால் அங்கு, இரு கிராமத்தினருக்கும் மோதல் ஏற்பட்டது.

குற்றவாளிகளை கைது செய்ய வலியுறுத்தி, நேற்று சோகனுார் கிராமத்தினர் குருவராஜபேட்டை - திருத்தணி சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.ராணிப்பேட்டை, எஸ்.பி., சிவக்குமாரிடம், சோகனுாரை சேர்ந்தவர்கள் கூறுகையில், 'அரக்கோணம் தொகுதியில், வி.சி., கட்சிக்கு ஆதரவாக சூர்யா, அர்ஜுன், தேர்தல் பிரசாரம் செய்தனர். அவர்களை பெருமாள் ராஜபேட்டையை சேர்ந்த, பா.ம.க.,வினர் தடுத்தனர். இதனால், அவர்களுக்குள் தேர்தல் முன்விரோதம் ஏற்பட்டது. இதனால், அவர்களை கொலை செய்து விட்டனர்.

குற்றவாளிகளை கைது செய்யும் வரை, உடலை வாங்க மாட்டோம், சாலை மறியலை கைவிட மாட்டோம்' எனக்கூறினர்.அரக்கோணம் தாலுகா போலீசார் வழக்குப் பதிவு செய்து, பெருமாள் ராஜபேட்டையை சேர்ந்த, 24 - 37 வயதுடைய நான்கு பேரை கைது செய்தனர். அப்பகுதியில் பதற்றம் நிலவுவதால், போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.


ஆட்டோ டிரைவர்

திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசியை சேர்ந்தவர் ஆட்டோ டிரைவர் நசீர்கான், 30. இவருக்கும், அதே பகுதியை சேர்ந்த மற்றொரு ஆட்டோ டிரைவர் மஸ்தான், 28, என்பவருக்கும் ஆட்டோ சங்கம் அமைப்பது தொடர்பாக, தகராறு ஏற்பட்டு முன்விரோதம் இருந்து வந்தது. கடந்த நவ., 21ல், நசீர்கான் ஆதரவாளர்களான தாமோதரன், தரணிதரன், ஆகிய இருவரும், மஸ்தானை கடத்தி சென்று தாக்கி, நசீர்கானிடம் தகராறில் ஈடுபடக் கூடாது என, எச்சரித்தனர்.

இது குறித்து போலீசார் விசாரித்து, நசீர்கான், தாமோதரன், தரணிதரன் ஆகிய மூவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்நிலையில் மூவரும் கடந்த ஜன., 18ல், ஜாமினில் வெளியே வந்தனர். நசீர்கான் ஆட்டோ ஓட்டுவதை விட்டுவிட்டு, செய்யாறு மாங்கால் கூட்ரோட்டில், சிக்கன் பகோடா கடை நடத்தி வந்தார்.விசாரணைநேற்று முன்தினம் இரவு, 10:00 மணிக்கு வந்தவாசியில் உள்ள வீட்டிற்கு நசீர்கான், அவரது மனைவி சாகினா, 25, ஆகிய இருவரும் பைக்கில் சென்றனர்.

ஊராட்சி ஒன்றிய முஸ்லிம் தொடக்கப் பள்ளி அருகே சென்றபோது, முகமூடி அணிந்து வந்த, மஸ்தான் ஆதரவாளர்கள், 10 பேர் நசீர்கானை மறித்து ஓட, ஓட விரட்டி கத்தியால் வெட்டிக் கொலை செய்து விட்டு தப்பி சென்றனர்.இது குறித்து, வந்தவாசி போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X