சம்பவம் செய்தி

தமிழ்நாடு

பிளாஸ்டிக் ஆலை கழிவு நீர் குடித்த கால்நடைகள் பலி

Added : ஏப் 08, 2021
Share
Advertisement
திருநெல்வேலி:தனியார் பிளாஸ்டிக் ஆலையில் இருந்து வெளியேறும் கழிவுநீரை அருந்திய கால்நடைகள் இறந்ததாக வந்த புகாரின் பேரில் மாசுகட்டுப்பாட்டு அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.திருநெல்வேலி பேட்டை, கொண்டாநகரத்தில் இருந்து திருப்பணிகரிசல்குளம் செல்லும் சாலையில் பிளாஸ்டிக் ஆலை உள்ளது. பழைய பிளாஸ்டிக் கழிவுகளை சுத்திகரிக்கும் பணி நடக்கிறது. அங்கிருந்து வெளியேறும் கழிவு

திருநெல்வேலி:தனியார் பிளாஸ்டிக் ஆலையில் இருந்து வெளியேறும் கழிவுநீரை அருந்திய கால்நடைகள் இறந்ததாக வந்த புகாரின் பேரில் மாசுகட்டுப்பாட்டு அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.

திருநெல்வேலி பேட்டை, கொண்டாநகரத்தில் இருந்து திருப்பணிகரிசல்குளம் செல்லும் சாலையில் பிளாஸ்டிக் ஆலை உள்ளது. பழைய பிளாஸ்டிக் கழிவுகளை சுத்திகரிக்கும் பணி நடக்கிறது. அங்கிருந்து வெளியேறும் கழிவு நீர் ஆலைக்கு அருகே, குளம்போல தேங்கி நிற்கிறது. அங்கு மேயவரும் கால்நடைகள் அந்த தண்ணீரை குடிப்பதால் இறந்துவிடுகின்றன. ஏற்கனவே,10க்கும் மேற்பட்ட ஆடுகள், ஐந்து மாடுகள் இறந்து உள்ளன.

சிவா என்பவருக்கு சொந்தமான மாடு கழிவு நீரை குடித்ததால் இறந்ததாக அந்த பகுதியை சேர்ந்தவர்கள் புகார் தெரிவித்தனர். சம்பவ இடத்தில் மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர். மாசுகட்டுப்பாட்டு வாரிய பொறியாளர் பின்டோ கூறுகையில், ''பிளாஸ்டிக் சுத்திகரிப்பிற்கு எத்தகைய வேதிப்பொருட்கள் பயன்படுத்தப்படுகின்றன என்பதை அறிய ஆலை கழிவு நீர் மாதிரி சோதனைக்கு அனுப்பிஉள்ளோம். ''சோதனை முடிவு வந்த பிறகு நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X