எல்லை பாதுகாப்பு வீரர்கள் 11 பேருக்கு கொரோனா உறுதி| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

எல்லை பாதுகாப்பு வீரர்கள் 11 பேருக்கு கொரோனா உறுதி

Added : ஏப் 08, 2021
Share
சிவகங்கை:இந்தோ - திபெத் எல்லை பாதுகாப்பு படை பயிற்சி மைய வீரர்கள், 11 பேருக்கு கொரோனா உறுதியால் சிவகங்கை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். சிவகங்கை மாவட்டம் இலுப்பக்குடியில் உள்ள இந்தோ - திபெத் எல்லை பாதுகாப்பு படை பயிற்சி மையத்தில் மஹாராஷ்டிரா, ஒடிசா, கர்நாடகா, ஆந்திரா ஆகிய மாநிலங்களை சேர்ந்த, 500க்கும் மேற்பட்ட வீரர்கள் பயிற்சி பெறுகின்றனர். நேற்று முன்தினம்

சிவகங்கை:இந்தோ - திபெத் எல்லை பாதுகாப்பு படை பயிற்சி மைய வீரர்கள், 11 பேருக்கு கொரோனா உறுதியால் சிவகங்கை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

சிவகங்கை மாவட்டம் இலுப்பக்குடியில் உள்ள இந்தோ - திபெத் எல்லை பாதுகாப்பு படை பயிற்சி மையத்தில் மஹாராஷ்டிரா, ஒடிசா, கர்நாடகா, ஆந்திரா ஆகிய மாநிலங்களை சேர்ந்த, 500க்கும் மேற்பட்ட வீரர்கள் பயிற்சி பெறுகின்றனர். நேற்று முன்தினம் அப்பயிற்சி மைய வீரர் ஒருவருக்கு கொரோனா ஏற்பட்டது.

இதையடுத்து அவரது பயிற்சி பிரிவை சேர்ந்த, 100 க்கும் மேற்பட்ட வீரர்களுக்கு சிவகங்கை நகர் நல மையத்தில் கொரோனா பரிசோதனை நடந்தது. இவர்களில் மஹாராஷ்டிரா மாநிலத்தை சேர்ந்த, 11 வீரர்களுக்கு கொரோனா உறுதியானதால், சிவகங்கை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X