சிறப்பு பகுதிகள்

சொல்கிறார்கள்

பிறர் உதவியின்றி குழந்தைகளை வளர்க்கிறோம்!

Added : ஏப் 08, 2021
Share
Advertisement
பெங்களூரில் வசிக்கும், விழிச் சவால் தம்பதியான காளிதாசன் - மோஹிதா: காளிதாசன்: பூர்வீகம் கரூர் மாவட்டம். ரொம்பவே ஏழ்மையான குடும்பம். குழந்தைப் பருவத்துலயே எனக்கு மாலைக்கண் நோய் இருந்துச்சு; ஒரு கட்டத்துல பார்வைத்திறன் முழுமையா போயிடுச்சு.வாழ்க்கையே போராட்டமா இருந்தாலும், சிரமங்களைக் கடந்து, டிப்ளமா முடிச்சேன். தனியார் நிறுவன வேலை, 'டியூஷன்' எடுக்கிறது, எல்.ஐ.சி.,
சொல்கிறார்கள்

பெங்களூரில் வசிக்கும், விழிச் சவால் தம்பதியான காளிதாசன் - மோஹிதா: காளிதாசன்: பூர்வீகம் கரூர் மாவட்டம். ரொம்பவே ஏழ்மையான குடும்பம். குழந்தைப் பருவத்துலயே எனக்கு மாலைக்கண் நோய் இருந்துச்சு; ஒரு கட்டத்துல பார்வைத்திறன் முழுமையா போயிடுச்சு.வாழ்க்கையே போராட்டமா இருந்தாலும், சிரமங்களைக் கடந்து, டிப்ளமா முடிச்சேன். தனியார் நிறுவன வேலை, 'டியூஷன்' எடுக்கிறது, எல்.ஐ.சி., ஏஜன்ட் வேலை, துணி வியாபாரம், மரம் வெட்டுற வேலை, ஆடு, மாடு மேய்க்கிறதுனு எல்லா வேலையும் செய்தேன். கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த மோஹிதாவும் ஏழ்மையான குடும்பம் தான். 5 வயதில் பார்வைத்திறனை இழந்த அவரும் டிப்ளமா படிச்சிருக்காங்க. 10 வருஷத்துக்கு முன், நாங்க ரெண்டு பேரும் பெங்களூர்ல, தனியார் அமைப்புல, கணினிப் பயிற்சிஎடுத்துக்கிட்டோம். நண்பர்களா பழகி, காதலிக்க ஆரம்பிச்சோம். போட்டித் தேர்வுக்குத் தயாரான என்னை மோஹிதா ஊக்கப்படுத்த, கல்யாணத்துக்குப் பிறகு, எனக்கு வங்கி ஒன்றில் வேலை கிடைச்சது; உதவி மேலாளராக பணியாற்றுகிறேன். மோஹிதா: எங்களின் மூன்று குழந்தைகளுக்கும் பார்வை குறைபாடு ஏதும் கிடையாது. ஒவ்வொரு முறையும் பிரசவம் முடிந்த பிறகும், மூன்று மாதங்கள் தான் அம்மா எனக்குத் துணையா இருப்பாங்க. அதன் பிறகு எங்க குழந்தைகளைத் தனியாளா நானே கவனிச்சுக்கிறேன். தாய் குரங்கைப் போல, எந்நேரமும் குழந்தைகளை என் பிடியிலேயே வெச்சிருந்து, கவனமா பார்த்துப்பேன். குழந்தைகள் துாங்கிய பிறகு தான், சமையல் உள்ளிட்ட மற்ற வேலைகளைச் செய்வேன். ஆனாலும், 10 நிமிஷங்களுக்கு ஒருமுறை, குழந்தைகளோட உடலை முழுமையா தொட்டுப் பார்த்துட்டே இருப்பேன். யூரின், மலம் கழிச்சிருந்தா, உடனே சுத்தம் பண்ணிடுவேன்.

எனக்குப் பார்வையில்லாததால, பச்சிளம் பருவத்துல குழந்தைகளைக் கவனிச்சுக்க ரொம்பவே சிரமமாகத் தான் இருந்துச்சு. பிறர் உதவியின்றியே, குழந்தைகளையும் வளர்க்க முடிவெடுத்தோம். கூடுதல் ஆர்வத்தால் குழந்தை வளர்ப்பு எங்களுக்குச் சிரமமா தெரியவில்லை. வீட்டு நிர்வாகம் எல்லாத்தையும் நானும், கணவரும் செய்திடுவோம். ஸ்கூல் போற பெரிய பொண்ணும், பையனும், வீட்டுக்கு வந்த பிறகு, மூணு குழந்தைகளையும் எங்க, 'அப்பார்ட்மென்ட்' வளாகத்துல விளையாடக் கூட்டிட்டுப் போவேன். அப்போ என்னோட முழுக் கவனமும் அவங்க மேல மட்டும் தான் இருக்கும். குழந்தைகளோட சின்னச் சின்ன சிணுங்கல், அழுகை, சிரிப்பு சத்தங்களை வெச்சே அவங்களோட உணர்வுகளையும், தேவைகளையும் புரிஞ்சுப்பேன். பொருளாதார ரீதியான விஷயங்களை கணவர் பார்த்துப்பார். வீட்டு நிர்வாகத்தை முழுசா நான் கவனிச்சுக்கிறேன். ரொம்ப மகிழ்ச்சியாக வாழ்கிறோம்!

Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X