சம்பவம் செய்தி

தமிழ்நாடு

மளிகை கடை டோக்கன் விவகாரம் அ.ம.மு.க., செயலர் மீது வழக்கு

Added : ஏப் 08, 2021
Share
Advertisement
தஞ்சாவூர்:கும்பகோணம் தொகுதியில் ஓட்டுக்கு, 2,000 ரூபாய் மளிகை பொருட்கள் டோக்கன் வழங்கிய விவகாரத்தில், அ.ம.மு.க., கிளை செயலர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து உள்ளனர்.தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் தொகுதி யில் போட்டியிட்ட அ.ம.மு.க., வேட்பாளர் பாலமுருகன் தரப்பில், கடந்த, 5ம் தேதி 2,000 ரூபாய் மதிப்புள்ள டோக்கன்கள், வாக்காளர்களுக்கு வழங்கப்பட்டன. அந்த டோக்கனில், கும்பகோணம் பெரிய

தஞ்சாவூர்:கும்பகோணம் தொகுதியில் ஓட்டுக்கு, 2,000 ரூபாய் மளிகை பொருட்கள் டோக்கன் வழங்கிய விவகாரத்தில், அ.ம.மு.க., கிளை செயலர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து உள்ளனர்.

தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் தொகுதி யில் போட்டியிட்ட அ.ம.மு.க., வேட்பாளர் பாலமுருகன் தரப்பில், கடந்த, 5ம் தேதி 2,000 ரூபாய் மதிப்புள்ள டோக்கன்கள், வாக்காளர்களுக்கு வழங்கப்பட்டன. அந்த டோக்கனில், கும்பகோணம் பெரிய கடைத் தெருவில் உள்ள பிரியம் மளிகை கடையில் கொடுத்து, மளிகைப் பொருட்கள் வாங்கிக் கொள்ள வாக்குறுதி அளிக்கப்பட்டிருந்தது.

மளிகை கடையில் டோக்கனை கொடுத்து, பொருட்களை வாங்க பொதுமக்கள் வந்தனர். அப்போது கடையின் உரிமையாளர், டோக்கனுக்கும், தங்களுக்கும் சம்பந்தம் இல்லை என, தெரிவித்தார். இதையடுத்து விசாரணை நடத்த, வருவாய்த்துறை மற்றும் போலீசாருக்கு, கலெக்டர் கோவிந்தராவ் உத்தரவிட்டார்.
போலீசார், டோக்கன் பெற்றவர்களிடம் நடத்திய விசாரணையில், கொரநாட்டு கருப்பூர் பகுதி அ.ம.மு.க., கிளைச் செயலர் கனகராஜ், 62, என்பவர், 2,000 ரூபாய் டோக்கன்களை, வாக்காளர்களுக்கு ஓட்டுப்போட வழங்கியது தெரியவந்தது.

வி.ஏ.ஓ., சுரேந்தர்குமார் அளித்த புகார்படி கும்பகோணம் கிழக்கு போலீசார், கனகராஜ் மீது வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனர். தேர்தலில் ஓட்டளிக்க அரசியல் கட்சியினர் டோக்கன் கொடுத்த நிலையில், நிர்வாகி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. வேட்பாளர் மீதும் வழக்கு பதிவு செய்ய வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X