பிளாஸ்டிக் ஆலை கழிவுநீர் குடித்த கால்நடைகள் பலி: மாசுகட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் ஆய்வு| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

பிளாஸ்டிக் ஆலை கழிவுநீர் குடித்த கால்நடைகள் பலி: மாசுகட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் ஆய்வு

Added : ஏப் 08, 2021
Share
திருநெல்வேலி:திருநெல்வேலியில் தனியார் பிளாஸ்டிக் ஆலையில் இருந்து வெளியேறும் கழிவுநீரை அருந்திய கால்நடைகள் இறந்ததாக வந்த புகாரின் பேரில் மாசுகட்டுப்பாட்டு அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.திருநெல்வேலி பேட்டை கொண்டாநகரத்தில் இருந்து திருப்பணிகரிசல்குளம் செல்லும் சாலையில் பிளாஸ்டிக் ஆலை உள்ளது. பழைய பிளாஸ்டிக் கழிவுகளை சுத்திகரிக்கும் பணி நடக்கிறது. அங்கிருந்து

திருநெல்வேலி:திருநெல்வேலியில் தனியார் பிளாஸ்டிக் ஆலையில் இருந்து வெளியேறும் கழிவுநீரை அருந்திய கால்நடைகள் இறந்ததாக வந்த புகாரின் பேரில் மாசுகட்டுப்பாட்டு அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.

திருநெல்வேலி பேட்டை கொண்டாநகரத்தில் இருந்து திருப்பணிகரிசல்குளம் செல்லும் சாலையில் பிளாஸ்டிக் ஆலை உள்ளது. பழைய பிளாஸ்டிக் கழிவுகளை சுத்திகரிக்கும் பணி நடக்கிறது. அங்கிருந்து வெளியேறும் கழிவுநீர் ஆலைக்கு அருகே குளம்போல தேங்கி நிற்கிறது. அங்கு மேயவரும் கால்நடைகள் அந்த தண்ணீரை குடிப்பதால் இறந்துவிடுகின்றன. ஏற்கனவே பத்துக்கும் மேற்பட்ட ஆடுகள் 5 மாடுகள் இறந்துள்ளன

சிவா என்பவருக்கு சொந்தமான மாடு கழிவுநீரை குடித்ததால் இறந்ததாக அந்த பகுதியை சேர்ந்தவர்கள் புகார் தெரிவித்தனர்.சம்பவ இடத்தில் மாசுகட்டுப்பாட்டுவாரிய அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர். மாசுகட்டுப்பாட்டு வாரிய பொறியாளர் பின்டோ கூறுகையில் பிளாஸ்டிக் சுத்திகரிப்பிற்கு எத்தகைய வேதிப்பொருட்கள் பயன்படுத்தப்படுகின்றன என்பதை அறிய ஆலைகழிவு நீர் மாதிரி சோதனைக்கு அனுப்பியுள்ளோம். சோதனை முடிவு வந்த பிறகு நடவடிக்கை எடுக்கப்படும்' என்றார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X