மூணாறு:கேரளாவில் கொரோனா பரவல் அதிகரித்துள்ளதால் கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.
மாநிலத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பின் எண்ணிக்கை 3500ஐ கடந்த நிலையில் இரண்டாம் கொரோனா பரவல் அதிகரித்துள்ளது. கட்டுப்பாடுகளை அதிகப்படுத்துவதற்கு தலைமை செயலாளர் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் பல்வேறு முடிவுகள் எடுக்கப்பட்டன.
முககவசம், சமூக இடைவெளி ஆகியவற்றை போலீசார் உறுதிபடுத்த வேண்டும். அப் பணிகளை ஏ.டி.ஜி.பி. விஜய் சாஹரே ஒருங்கிணைப்பார்.மக்கள் அதிகமாக கூடும் பகுதிகளில் போலீசார் கூடுதல் நியமிக்கப்படுவர். கட்டுப்பாடுகளை மீறுவோரிடம் அபராதம் வசூலிக்கப் படும்.பிற மாநிலங்களில் இருந்து வருவோர் ஏழு நாட்கள் தனிமையில் இருக்க வேண்டும். பொது இடங்களில் கட்டுப்பாடுகளை உறுதிப்படுத்தவும் அபராதம் விதிக்கவும் உயரதிகாரிகள் பணியில் அமர்த்தப்படுவர்.
தேர்தல் பணியாளர்கள், ஓட்டுச்சாவடி ஏஜென்டுகள், பிரசாரத்தில் பங்கேற்றவர்களுக்கு கொரோனா அறிகுறி தென்பட்டால் சுயமாக தனிமைபடுத்திக் கொள்வதுடன் சோதனை நடத்த வேண்டும். கட்டுப்பாடுகள் நேற்று முதல் அமலுக்கு வந்தன.கொரோனா பரவலை கட்டுக்குள் கொண்டு வர சோதனை மற்றும் தடுப்பூசி எண்ணிக்கையை அதிகரிக்குமாறு சுகாதாரத்துறையினர் வலியுறுத்தியுள்ளனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE