துாத்துக்குடி:மனைவியை தற்கொலைக்கு துாண்டிய கணவருக்கு, 10 ஆண்டுகள்சிறைத் தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டது.
துாத்துக்குடி மாவட்டம் மணப்பாடு, புதுக்குடியைச் சேர்ந்தவர் லாரன்ஸ், 39. மனைவி சியாமளா 32. இவர்களுக்கு, 2006ல் திருமணம் நடந்தது. குழந்தைகள் இல்லை. லாரன்ஸ், மது போதையில்வந்து மனைவியிடம் தகராறு செய்துள்ளார். மனமுடைந்த சியாமளா, 2014 அக்., 20ல் துாக்குபோட்டு தற்கொலை செய்துகொண்டார்.குலசேகரபட்டினம்போலீசார் வழக்கு பதிந்தனர்.
வழக்கை விசாரித்த துாத்துக்குடி மகளிர் நீதிமன்ற நீதிபதிபாண்டியராஜன், லாரன்ஸ்க்கு, 10 ஆண்டுகள் சிறைத் தண்டனையும் ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE