பொது செய்தி

தமிழ்நாடு

 புதிய கடைகளுக்கு மின்இணைப்பு உள்ளாட்சி சான்றிதழ் அவசியம்

Added : ஏப் 08, 2021
Share
Advertisement
கம்பம்:புதிதாக கடைகள், வர்த்தக நிறுவனங்களுக்கு மின் இணைப்புக்காக விண்ணப்பித்து இருந்தால் சம்பந்தப்பட்ட உள்ளாட்சிகளிடமிருந்து சான்று பெற்று வர மின்வாரியம் நிபந்தனை விதித்துள்ளது.புதிய மின்இணைப்பு கேட்டு விண்ணப்பித்தால் உடனே மின்இணைப்பு வழங்கப்படும் என மின்வாரியம் அறிவித்துள்ளது. இந்நிலையில் புதிதாக கட்டப்படும் கடைகள், வர்த்தக நிறுவனங்கள் மின்இணைப்புக்கு

கம்பம்:புதிதாக கடைகள், வர்த்தக நிறுவனங்களுக்கு மின் இணைப்புக்காக விண்ணப்பித்து இருந்தால் சம்பந்தப்பட்ட உள்ளாட்சிகளிடமிருந்து சான்று பெற்று வர மின்வாரியம் நிபந்தனை விதித்துள்ளது.
புதிய மின்இணைப்பு கேட்டு விண்ணப்பித்தால் உடனே மின்இணைப்பு வழங்கப்படும் என மின்வாரியம் அறிவித்துள்ளது. இந்நிலையில் புதிதாக கட்டப்படும் கடைகள், வர்த்தக நிறுவனங்கள் மின்இணைப்புக்கு விண்ணப்பிக்கும் போது சம்பந்தப்பட்ட பேரூராட்சி, நகராட்சி நிர்வாகங்களிடமிருந்து கடைகள் கட்டி முடிக்கப்பட்டது உண்மை என சான்றிதழ் பெற்று சமர்ப்பிக்க வேண்டும் என புதிய உத்தரவை மின்வாரியம் பிறப்பித்துள்ளது. இதனால் சான்றிதழ் வேண்டி விண்ணப்பித்து காத்துக் கிடக்கின்றனர்.

வர்த்தகர்கள் கூறுகையில், 'மின்வாரியத்தின் உத்தரவால் புதிய வர்த்தக நிறுவனங்களுக்கு மின்இணைப்பு பெறுவதில் தேவையற்ற காலதாமதம் ஏற்படுகிறது. ஏற்கெனவே இருந்த நடைமுறையை பின்பற்ற மின்வாரியம் முன்வர வேண்டும்' என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X