பொது செய்தி

தமிழ்நாடு

பட்டுப்புழு விவசாயிகளே கவனம்!

Added : ஏப் 08, 2021
Share
Advertisement
பொள்ளாச்சி:பொள்ளாச்சி பகுதியில் கோடை வெயில் கடுமையாக இருப்பதால், பட்டுப்புழு விவசாயிகள் பராமரிப்பில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என, பட்டுவளர்ச்சித் துறை அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.பொள்ளாச்சி தெற்கு ஒன்றிய கிராமங்களில் விவசாயிகள் மல்பெரி பயிரிட்டு, மனை அமைத்து, பட்டுப்புழு வளர்ப்பு மேற்கொள்கின்றனர். தற்போது, கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளதால், மனை
 பட்டுப்புழு விவசாயிகளே கவனம்!

பொள்ளாச்சி:பொள்ளாச்சி பகுதியில் கோடை வெயில் கடுமையாக இருப்பதால், பட்டுப்புழு விவசாயிகள் பராமரிப்பில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என, பட்டுவளர்ச்சித் துறை அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.பொள்ளாச்சி தெற்கு ஒன்றிய கிராமங்களில் விவசாயிகள் மல்பெரி பயிரிட்டு, மனை அமைத்து, பட்டுப்புழு வளர்ப்பு மேற்கொள்கின்றனர். தற்போது, கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளதால், மனை மற்றும் மல்பெரி பராமரிப்பில் கூடுதல் கவனம் செலுத்த, பட்டுவளர்ச்சித் துறை அறிவுறுத்தியுள்ளது.வெயிலின் தாக்கத்தால் மல்பெரி இலைகளிலுள்ள நீர்ச்சத்து குறைந்து, பழுத்துவிடும். இதைத் தவிர்க்க, பவர் ஸ்பிரேயர் பயன்படுத்தி, செடிகளின் மேல் தண்ணீர் தெளிக்கலாம். மேலும், இலைகளை வழக்கமான காலத்துக்கு முன்பே அறுவடை செய்வதும் நல்லது.இலைகளை அறுவடை செய்தவுடன் புழுக்களுக்கு உணவு வழங்குவதால் இலையில், சத்துகள் நிறைந்திருக்கும். பறித்த இலைகள் வாடி வீணாவதை தவிர்க்க, இரண்டு முறைக்கு பதில், மூன்று அல்லது நான்கு முறை புழுக்களுக்கு உணவிடலாம்.அறுவடை செய்யப்பட்ட இலைகளை, ஒரே இடத்தில் குவிக்காமல், காற்றோட்டத்துடன் இருக்கும் வகையில் வைக்க வேண்டும்.புழு வளர்ப்பு மனை பராமரிப்பில், மனையில் போதுமான காற்றோட்டம் இருப்பதை, உறுதி செய்ய வேண்டும். அதிகப்படியான வெப்பத்தைச் சமாளிக்க, புழு வளர்ப்பு மனையைச் சுற்றிலும், ஈர சாக்குப்பைகளைக் கட்டித் தொங்க விடலாம்.கோடைக்காலத்தில், பால் புழுநோய் மற்றும் கண்ணாடி பூச்சி தாக்குவதற்கு வாய்ப்புள்ளது. நோய் தாக்கத்தைக் கட்டுப்படுத்த, மனையில் அடிக்கடி சுண்ணாம்புக் கரைசலைத் தெளிக்க வேண்டும்.இவ்வாறு, பட்டு வளர்ச்சித்துறை அறிவுறுத்தியுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X