பொது செய்தி

தமிழ்நாடு

பணம் பறிமுதலில் தமிழகம் முதலிடம்

Updated : ஏப் 10, 2021 | Added : ஏப் 08, 2021 | கருத்துகள் (18)
Share
Advertisement
சென்னை :தமிழகம் உட்பட, தேர்தல்நடந்த ஐந்து மாநிலங்களிலும், 2016 தேர்தலின் போது பிடிபட்டதை விட, இந்த முறை, பல மடங்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் பிடிபட்டுள்ளன. 446 கோடி ரூபாய் ரொக்கம், பொருட்கள் பிடிபட்டு, தமிழகம் முதலிடத்தில் உள்ளது.தமிழகம், புதுச்சேரி, கேரளா, அசாம் மாநிலங்களில், சட்டசபை தேர்தல் முடிந்துள்ளது. மேற்கு வங்கத்தில், எட்டு கட்டங்களாக
பணம், பறிமுதல், தமிழகம், முதலிடம்

சென்னை :தமிழகம் உட்பட, தேர்தல்நடந்த ஐந்து மாநிலங்களிலும், 2016 தேர்தலின் போது பிடிபட்டதை விட, இந்த முறை, பல மடங்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் பிடிபட்டுள்ளன. 446 கோடி ரூபாய் ரொக்கம், பொருட்கள் பிடிபட்டு, தமிழகம் முதலிடத்தில் உள்ளது.

தமிழகம், புதுச்சேரி, கேரளா, அசாம் மாநிலங்களில், சட்டசபை தேர்தல் முடிந்துள்ளது. மேற்கு வங்கத்தில், எட்டு கட்டங்களாக ஓட்டுப்பதிவுநடைபெறுகிறது. இதுவரை மூன்று கட்ட ஓட்டுப்பதிவு முடிந்துள்ளது. ஐந்து கட்டம் நடைபெற வேண்டியுள்ளது.

தேர்தலின் போது, வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் வழங்குவதை தடுக்க, தேர்தல் கமிஷன் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்தது. பறக்கும் படை, நிலை கண்காணிப்பு குழு அமைக்கப்பட்டு, 24 மணி நேரமும் வாகன சோதனை நடத்தப்பட்டது. வருமான வரித்துறையினர், சந்தேகத்திற்குரிய இடங்களில் சோதனை நடத்தினர்.


latest tamil news



'ஆன்லைன்' பணப்பரிவர்த்தனையும் கண்காணிக்கப்பட்டது.கடும் சோதனை காரணமாக, ஐந்து மாநிலங்களிலும் பறிமுதல் செய்யப்பட்ட, பணம் மற்றும் பரிசுப் பொருட்களின் மதிப்பு, ௨௦௧௬ சட்டசபை தேர்தலை விட, பன் மடங்கு அதிகம்.

ஐந்து மாநிலங்களில், இம்முறை அதிகபட்சமாக, தமிழகத்தில், 236.51 கோடி ரூபாய் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது. அதேபோல, தங்கம், வெள்ளி, வைரம் போன்றவையும், தமிழகத்தில் அதிகம் பிடிபட்டன. போதை பொருட்கள்மற்றும் மருந்துகள், மேற்கு வங்கத்தில் அதிகம் பிடிபட்டன. அசாம் மாநிலத்தில், அதிக அளவு மதுபானங்கள் பிடிபட்டன.

Advertisement




வாசகர் கருத்து (18)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
தமிழவேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
09-ஏப்-202122:01:47 IST Report Abuse
தமிழவேல் கறுப்புப் பணம் திரும்பவும் பொழங்குது... எல்லா நோட்டையும் செல்லாதுன்னு அறிவிக்கணும்.
Rate this:
Cancel
தமிழவேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
09-ஏப்-202121:59:54 IST Report Abuse
தமிழவேல் இங்கே மாட்டுனது 446,28 c என்றால், மற்றவிடங்களில் மாட்டவில்லை என்றும், அதிகமாக வாக்காளர்களை சென்றடைந்தது என்றும் கூறலாம்.
Rate this:
Cancel
sankaseshan - mumbai,இந்தியா
09-ஏப்-202118:36:01 IST Report Abuse
sankaseshan தமிழன்டா கொள்ளையடிக்கறதுல திராவிட தெலுங்கு கன்னட துமி லங்களை ஜெயிக்கமுடியசைத்து கட்டுமரம் போட்ட பவுண்டேஷன் உறுதியானது .
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X