தேவையற்ற வளர்ச்சிப்பணி: மக்கள் கொதிப்பு

Added : ஏப் 08, 2021
Share
Advertisement
வால்பாறை:வால்பாறை பகுதியில் தேவையற்ற இடங்களில் வளர்ச்சிப் பணி என்ற பெயரில், மக்களின் வரிப்பணத்தை வீணடிப்பதாகவும், அடிப்படை கட்டமைப்புகளில் கவனம் செலுத்துவதில்லை என்றும், மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.வால்பாறை வாழைத்தோட்டம் பகுதிக்கு செல்லும் வழியில், மூன்று இடங்களில், ஆளை விழுங்கும் அளவுக்கு மெகா சைஸ் குழிகள் மூடப்படாமல் உள்ளன. சாக்கடை கால்வாய் செல்லும்
 தேவையற்ற வளர்ச்சிப்பணி: மக்கள் கொதிப்பு

வால்பாறை:வால்பாறை பகுதியில் தேவையற்ற இடங்களில் வளர்ச்சிப் பணி என்ற பெயரில், மக்களின் வரிப்பணத்தை வீணடிப்பதாகவும், அடிப்படை கட்டமைப்புகளில் கவனம் செலுத்துவதில்லை என்றும், மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.வால்பாறை வாழைத்தோட்டம் பகுதிக்கு செல்லும் வழியில், மூன்று இடங்களில், ஆளை விழுங்கும் அளவுக்கு மெகா சைஸ் குழிகள் மூடப்படாமல் உள்ளன. சாக்கடை கால்வாய் செல்லும் வழியில், திறந்த வெளியில் காணப்படும் மெகாசைஸ் குழியால் விபத்து ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.ஆனால், இவற்றைச் சரி செய்ய நகராட்சி நிர்வாகம் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. மாறாக, தேவையற்ற இடங்களில் வளர்ச்சிப் பணி என்ற பெயரில், வரிப்பணத்தை வீணடிப்பதாக புகார் எழுந்துள்ளது.இது குறித்து பொதுமக்கள் கூறியதாவது:வால்பாறையில் மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் செய்து தருவதில்லை. குறிப்பாக குடியிருப்பு பகுதியில் இடிந்த நிலையில் உள்ள நடைபாதை, தடுப்புச்சுவர் கட்டித்தர வேண்டும் என்று பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. வாகனங்களே செல்லாத ரோட்டில், தடுப்புச்சுவர் கட்டும் பணி பல லட்சம் மதிப்பீட்டில் நடக்கிறது. அதேபோல வால்பாறை நல்லகாத்து ரோட்டில் ரோடு விரிவுபடுத்தும் பணியும், தேவையில்லாத ஒன்று. தடுப்புச்சுவர் கட்டும் பணி என்ற பெயரில், நகராட்சியில் பல கோடிக்கணக்கான ரூபாய் கொள்ளையடிக்கப்படுகிறது.மக்கள் வரிப்பணத்தில் மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் செய்துதர நகராட்சி அதிகாரிகள் தொடர்ந்து தயக்கம் காட்டி வருகின்றனர்.இவ்வாறு, அவர்கள் தெரிவித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X