பொது செய்தி

தமிழ்நாடு

சுகாதார நிலையம் தேவை: 20 ஆண்டுகளாக எதிர்பார்ப்பு

Added : ஏப் 08, 2021
Share
Advertisement
வால்பாறை;வால்பாறையிலிருந்து, 20 கி.மீ., தொலைவில், கவர்க்கல் டீ எஸ்டேட் அமைந்துள்ளது. அருகில் உள்ள சக்தி - தலநார் பகுதியில், 10க்கும் மேற்பட்ட சிறிய தேயிலை எஸ்டேட்கள் உள்ளன. இங்குள்ள எஸ்டேட்களில், இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர்.ஆரம்ப சுகாதார நிலையம் இல்லாததால், இங்குள்ள தொழிலாளர்கள், சாதாரண காய்ச்சல், சளி என்றாலும், வால்பாறை நகரிலுள்ள அரசு

வால்பாறை;வால்பாறையிலிருந்து, 20 கி.மீ., தொலைவில், கவர்க்கல் டீ எஸ்டேட் அமைந்துள்ளது. அருகில் உள்ள சக்தி - தலநார் பகுதியில், 10க்கும் மேற்பட்ட சிறிய தேயிலை எஸ்டேட்கள் உள்ளன. இங்குள்ள எஸ்டேட்களில், இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர்.ஆரம்ப சுகாதார நிலையம் இல்லாததால், இங்குள்ள தொழிலாளர்கள், சாதாரண காய்ச்சல், சளி என்றாலும், வால்பாறை நகரிலுள்ள அரசு மருத்துவமனைக்குச் செல்ல வேண்டியுள்ளது.இதனால், 20 ஆண்டுகளுக்கு மேலாக தொழிலாளர்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.இது குறித்து டீ எஸ்டேட் தொழிலாளர்கள் கூறியதாவது:கவர்க்கல் பகுதியை சுற்றிலும் சக்தி-தலநார், பிளண்டிவேலி, மகாவீர், லில்லி, மகாலட்சுமி உட்பட, 10க்கும் மேற்பட்ட எஸ்டேட்கள் உள்ளன. இங்கு பணிபுரியும் தொழிலாளர்களுக்கு எந்த ஓர் அடிப்படை வசதியும் இல்லை. குறிப்பாக, போதிய அளவு பஸ்வசதி இல்லை. மருத்துவ வசதியும் இல்லை. எனவே, கூலி வேலை செய்து வரும் தொழிலாளர்களின் நலன் கருதி, கவர்க்கல் எஸ்டேட் பகுதியில் ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்க வேண்டும்.இவ்வாறு, அவர்கள் தெரிவித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X