பொது செய்தி

தமிழ்நாடு

கீழடி அகழாய்வு பணி மந்தம்

Added : ஏப் 08, 2021
Share
Advertisement
திருப்புவனம்:சிவகங்கை மாவட்டம் கீழடி அகழாய்வில் தொல்லியல் துறையினர் போதிய ஆர்வம் காட்டாததால் மந்த கதியில் பணிகள் நடந்து வருகின்றன. குறிப்பாக ஆய்வுக்கான நிதி ஒதுக்கீடு செய்தும், அதை விடுவிக்கவில்லை என புகார் எழுந்துள்ளது.கீழடி 7ம் கட்ட அகழாய்வு பணிகள் கீழடி, அகரம், கொந்தகை உள்ளிட்ட இடங்களில் பிப்., 13ல் துவங்கியது. கொந்தகையில் மூன்று, அகரத்தில் ஒன்று, கீழடியில் இரண்டு

திருப்புவனம்:சிவகங்கை மாவட்டம் கீழடி அகழாய்வில் தொல்லியல் துறையினர் போதிய ஆர்வம் காட்டாததால் மந்த கதியில் பணிகள் நடந்து வருகின்றன. குறிப்பாக ஆய்வுக்கான நிதி ஒதுக்கீடு செய்தும், அதை விடுவிக்கவில்லை என புகார் எழுந்துள்ளது.

கீழடி 7ம் கட்ட அகழாய்வு பணிகள் கீழடி, அகரம், கொந்தகை உள்ளிட்ட இடங்களில் பிப்., 13ல் துவங்கியது. கொந்தகையில் மூன்று, அகரத்தில் ஒன்று, கீழடியில் இரண்டு குழிகள் தோண்டப்பட்டுள்ளன. தொல்லியல் துறை இயக்குனர் சிவானந்தம், இணை இயக்குனர் பாஸ்கரன், தொல்லியல் அலுவலர்கள் காவ்யா, அஜித், ரமேஷ் உட்பட 25 பேர் மட்டுமே 3 இடங்களில் ஆய்வு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இவர்களும் போதிய ஆர்வம் காட்டாததால் பணிகள் மந்த கதியில் நடக்கின்றன.7ம் கட்ட அகழாய்விற்கு நிதி ஒதுக்கினாலும் இன்னும் விடுவிக்கவில்லை. இதனால் கூடுதல் ஆட்கள் நியமிப்பதில் சிக்கல் எழுந்துள்ளது. அகழாய்வு பணிகள் துவங்கி 55 நாட்களை கடந்தும் இதுவரை பெரிய அளவில் பொருட்கள் எதுவும் கண்டறியவில்லை. உயர் ஆய்வாளர்கள் யாரும் அகழாய்வு தளத்தை பார்க்கவில்லை.

அகழாய்வு பணிகள் கோடை காலங்களில் மட்டுமே விறுவிறுப்பாக நடைபெறும் செப்டம்பரில் மழை காலம் துவங்குவதால் பணிகள் பாதிக்கும். எனவே தமிழக அரசு அகழாய்வு பணிகளுக்கு நிதியை விடுவித்து, பணிகளை துரிதப்படுத்த வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X