மகளுக்கு பாலியல் தொல்லை சாகும் வரை தந்தைக்கு சிறை| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

மகளுக்கு பாலியல் தொல்லை சாகும் வரை தந்தைக்கு சிறை

Added : ஏப் 08, 2021
Share
ஸ்ரீவில்லிபுத்தூர்:ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே 11 வயது மகளுக்கு பாலியல் துன்புறுத்தல் செய்த தந்தைக்கு இயற்கை மரணம் அடையும் வரை சிறை தண்டனை விதித்து போக்சோ நீதிமன்றம் உத்தரவிட்டது.விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே கொத்தங்குளம் கிராமத்தை சேர்ந்தவர் பெயின்டர் பிச்சைமாரி 40. ஆறாம் வகுப்பு படிக்கும் தனது 11 வயது மகளை 2014 செப்., 1ல் பாலியல் துன்புறுத்தல்

ஸ்ரீவில்லிபுத்தூர்:ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே 11 வயது மகளுக்கு பாலியல் துன்புறுத்தல் செய்த தந்தைக்கு இயற்கை மரணம் அடையும் வரை சிறை தண்டனை விதித்து போக்சோ நீதிமன்றம் உத்தரவிட்டது.

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே கொத்தங்குளம் கிராமத்தை சேர்ந்தவர் பெயின்டர் பிச்சைமாரி 40. ஆறாம் வகுப்பு படிக்கும் தனது 11 வயது மகளை 2014 செப்., 1ல் பாலியல் துன்புறுத்தல் செய்துள்ளார். ஸ்ரீவி., மகளிர் போலீசாரிடம் சிறுமி புகார் கூறினார். பிச்சைமாரி கைதானார். ஸ்ரீவி., போக்சோ நீதிமன்றத்தில் வழக்கு நடந்தது.

பிச்சைமாரிக்கு இயற்கை மரணம் அடையும் வரை ஆயுள் முழுவதும் சிறை தண்டனை, ரூ.35 ஆயிரம் அபராதம், சிறுமிக்கு ரூ. ஒரு லட்சம் அரசு சார்பில் இழப்பீடு வழங்க கலெக்டருக்கு பரிந்துரைத்து நீதிபதி பரிமளா உத்தரவிட்டார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X