வைக்கோலை தனியாக பிரிக்கும் அறுவடை இயந்திரம் அரசு வழங்குமா! நெல் அறுவடை தொடங்கியதால் விவசாயிகள் எதிர்பார்ப்பு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

வைக்கோலை தனியாக பிரிக்கும் அறுவடை இயந்திரம் அரசு வழங்குமா! நெல் அறுவடை தொடங்கியதால் விவசாயிகள் எதிர்பார்ப்பு

Added : ஏப் 08, 2021
Share
ஆனைமலை:ஆனைமலை ஒன்றிய பகுதிகளில், இரண்டாம் போக நெல் அறுவடைப் பணி தீவிரமடைந்துள்ளது. வைக்கோலை தனியாகப் பிரிக்கும் அறுவடை இயந்திரத்தை, அரசு குறைந்த வாடகையில் வழங்குமா, என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.ஆழியாறு அணையிலிருந்து, பழைய ஆயக்கட்டு பாசன திட்டத்துக்கு வழங்கப்படும் நீரைப் பயன்படுத்தி, இரண்டு போகத்தில் நெல், கரும்பு, வாழை சாகுபடி நடக்கிறது. ஒரு போகத்தில் மட்டுமே,
  வைக்கோலை தனியாக பிரிக்கும் அறுவடை இயந்திரம் அரசு வழங்குமா! நெல் அறுவடை தொடங்கியதால் விவசாயிகள் எதிர்பார்ப்பு

ஆனைமலை:ஆனைமலை ஒன்றிய பகுதிகளில், இரண்டாம் போக நெல் அறுவடைப் பணி தீவிரமடைந்துள்ளது. வைக்கோலை தனியாகப் பிரிக்கும் அறுவடை இயந்திரத்தை, அரசு குறைந்த வாடகையில் வழங்குமா, என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.ஆழியாறு அணையிலிருந்து, பழைய ஆயக்கட்டு பாசன திட்டத்துக்கு வழங்கப்படும் நீரைப் பயன்படுத்தி, இரண்டு போகத்தில் நெல், கரும்பு, வாழை சாகுபடி நடக்கிறது. ஒரு போகத்தில் மட்டுமே, 6,400 ஏக்கர் வரையில் சாகுபடி நடக்கிறது. இரண்டாம் போக சம்பா பட்ட சாகுபடிக்காக, கடந்த நவ., 6ம் தேதி தண்ணீர் திறக்கப்பட்டது. வரும் 15ம் தேதி வரை தண்ணீர் வழங்க, அரசு ஆணை பிறப்பித்துள்ளது. நவ., மாதம் திறக்கப்பட்ட தண்ணீரை பயன்படுத்தி, 1,200 ஏக்கரில், டிச., துவக்கத்தில் சன்ன ரகம் மற்றும் குண்டு ரக நெல் சாகுபடியை, விவசாயிகள் துவங்கினர்.இந்த நெல் ரகங்கள், 110 நாட்கள் சாகுபடி காலத்தைக் கொண்டவை. இவை, தற்போது அறுவடை பருவத்தை அடைந்துள்ளதால், கடந்த இரண்டு நாட்களாக, ஒன்றிய பகுதி முழுவதிலும் அறுவடைப்பணி தீவிரமாக நடந்து வருகிறது. அறுவடை செய்த நெல்லை விவசாயிகள், ஆனைமலை ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் உள்ள, அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களுக்கு கொண்டு சென்று விற்பனை செய்து வருகின்றனர். இந்நிலையில், அறுவடை இயந்திரம் வழங்குவதுடன், நெல் கொள்முதல் விலையையும் அரசு உயர்த்த வேண்டும் என, விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். ஆனைமலை ஒன்றிய விவசாயிகள் கூறியதாவது:'கர்டார்' நிறுவன இயந்திரம் மூலம் அறுவடை செய்தால், வைக்கோல் தனியாக கிடைக்கும், மிக விரைவாக அறுவடை செய்ய முடியும், வைக்கோலை தனியாக கட்டாக மாற்றி விற்பனை செய்ய முடியும். இதனால், பலரும் இவ்வகை இயந்திரத்தை தனியாரிடம், ஒரு மணி நேரத்துக்கு, 2,300 ரூபாய் வரை வாடகைக்கு எடுத்து, பயன்படுத்தி வருகின்றனர். இவ்வகை இயந்திரங்கள் டெல்டா பகுதிகளில், வேளாண் பொறியியல் துறை சார்பில் வாடகைக்கு விடப்படுகிறது. இதற்கு அரசு நிர்ணயித்த கட்டணம் ஒரு மணி நேரத்துக்கு, 350 ரூபாய் முதல் 500 ரூபாய் மட்டுமே. தனியாரிடம் அதிக வாடகை என்பதால், விவசாயிகளுக்கு இழப்பு ஏற்படுகிறது.அரசு தற்போது, சன்னரக நெல் குவிண்டாலுக்கு, 1,905 ரூபாய்; பொதுரக நெல் குவிண்டாலுக்கு, 1,865 ரூபாய் நிர்ணயித்துள்ளது. குவிண்டாலுக்கு, 2,500 ரூபாய் வழங்கினால் மட்டுமே, ஓரளவுக்காவது லாபம் கிடைக்கும். விவசாயிகளின் வாழ்வாதாரம் காக்க, அரசு விரைவில் அறுவடை இயந்திரம் வழங்கி, கொள்முதல் விலையையும் உயர்த்த வேண்டும். கடந்த சில மாதங்களாக, அதிக பனி இல்லை, மழையும் இல்லை என்பதால், நெல்லில் நோய் தாக்குதல்கள் குறைந்து, ஓரளவு நல்ல மகசூல் கிடைத்துள்ளது. வழக்கம் போல ஏக்கருக்கு, 40 முதல் 45 மூட்டைகள் நெல் கிடைத்துள்ளது.இவ்வாறு, விவசாயிகள் தெரிவித்தனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X