சிறுத்தை நள்ளிரவு நகர்வலம்: வால்பாறை மக்கள் அச்சம்

Added : ஏப் 08, 2021
Share
Advertisement
வால்பாறை:வால்பாறை சுற்றியுள்ள எஸ்டேட் பகுதியில் மட்டுமே வலம் வந்த சிறுத்தை, சமீபகாலமாக வால்பாறை நகரிலும் வரத் துவங்கியுள்ளது.நேற்று முன் தினம் நள்ளிரவு 12:10 மணிக்கு வால்பாறை நகர் வாழைத்தோட்டம் ஐ.பி.ஏ., சர்ச் வழியாக நடந்து வந்த சிறுத்தை சில நிமிடம் நோட்டமிட்டு, மெயின்ரோடு வழியாக நகருக்குள் புகுந்தது. சிறுத்தை நடமாட்டத்தை வாகனத்தில் வந்தவர்கள் வீடியோ எடுத்து, சமூக
 சிறுத்தை நள்ளிரவு நகர்வலம்: வால்பாறை மக்கள் அச்சம்

வால்பாறை:வால்பாறை சுற்றியுள்ள எஸ்டேட் பகுதியில் மட்டுமே வலம் வந்த சிறுத்தை, சமீபகாலமாக வால்பாறை நகரிலும் வரத் துவங்கியுள்ளது.நேற்று முன் தினம் நள்ளிரவு 12:10 மணிக்கு வால்பாறை நகர் வாழைத்தோட்டம் ஐ.பி.ஏ., சர்ச் வழியாக நடந்து வந்த சிறுத்தை சில நிமிடம் நோட்டமிட்டு, மெயின்ரோடு வழியாக நகருக்குள் புகுந்தது. சிறுத்தை நடமாட்டத்தை வாகனத்தில் வந்தவர்கள் வீடியோ எடுத்து, சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளனர்.இதுகுறித்து இப்பகுதி மக்கள் கூறியதாவது:கடந்த சில மாதங்களாக சிறுத்தை இந்தப்பகுதியில் குட்டியுடன் உலா வருகிறது. இதனால், இரவு நேரங்களில் வெளியே வர அச்சமாக உள்ளது. போதிய அளவு தெருவிளக்கும் இல்லாததால், போதிய பாதுகாப்பு இல்லாத நிலை நீடிக்கிறது. நகராட்சி நிர்வாகத்தின் அலட்சியத்தால், சிறுத்தையிடம் சிக்கி மக்கள் உயிர்பலியாகும் சூழல் உருவாகியுள்ளது. இவ்வாறு, அவர்கள் தெரிவித்தனர்.வனத்துறை அதிகாரிகள் கூறுகையில், 'நகரில் சிறுத்தை நடமாட்டம் இருப்பது உண்மைதான். மக்கள் மிகுந்த கவனத்துடன் இருக்க வேண்டும். இரவு நேரங்களில் பொதுமக்கள் வெளியில் நடந்து செல்வதை தவிர்க்க வேண்டும். வீடுகளில் வளர்ப்பு பிராணிகள் வளர்ப்பதை தவிர்க்க வேண்டும். சிறுத்தை நடமாட்டம் குறித்து தொடர்ந்து கண்காணித்து வருகிறோம்' என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X