பொது செய்தி

தமிழ்நாடு

சூழலை பாதுகாக்கும் மாணவர்களுக்கு விருது

Added : ஏப் 08, 2021
Share
Advertisement
ஆனைமலை:ஆனைமலை அடுத்த ரெட்டியாரூர் என்.ஜி.என்.ஜி., பள்ளி மாணவர்கள், பள்ளியில் பறவைகளுக்கு உணவு, நீர் வைப்பது, மரக்கன்றுகள் நடவு செய்து பராமரிப்பது என, பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபட்டு அசத்தி வருகின்றனர்.மேலும், தங்கள் வீடுகளிலும் காய்கறித்தோட்டம் அமைத்து, பறவைகளுக்கு உணவு, நீர் வழங்கி வருகின்றனர். இப்படி பல வகைகளில் இயற்கையை நேசித்து சூழல் பாதுகாப்புக்காக சிறப்பாக

ஆனைமலை:ஆனைமலை அடுத்த ரெட்டியாரூர் என்.ஜி.என்.ஜி., பள்ளி மாணவர்கள், பள்ளியில் பறவைகளுக்கு உணவு, நீர் வைப்பது, மரக்கன்றுகள் நடவு செய்து பராமரிப்பது என, பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபட்டு அசத்தி வருகின்றனர்.மேலும், தங்கள் வீடுகளிலும் காய்கறித்தோட்டம் அமைத்து, பறவைகளுக்கு உணவு, நீர் வழங்கி வருகின்றனர். இப்படி பல வகைகளில் இயற்கையை நேசித்து சூழல் பாதுகாப்புக்காக சிறப்பாக செயல்படும் மாணவர்களை பாராட்டுவதற்காக, பசுமை விருது அறிவிக்கப்பட்டுள்ளது.அதன்படி, முதற்கட்டமாக, பிளஸ் 2 படிக்கும், 26 மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டு, பசுமை விருது சான்றிதழ் வழங்கப்பட்டது. விருது வழங்கும் நிகழ்ச்சியில், பள்ளி தலைமை ஆசிரியர் ரங்கசாமி, தேசிய பசுமைப்படை பொறுப்பாசிரியர் பாலசுப்ரமணியன், ஆசிரியர்கள், மாணவர்கள் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X