காசி கோவில் பகுதியில் தொல்பொருள் ஆய்வு

Added : ஏப் 08, 2021
Share
Advertisement
வாரணாசி:வாரணாசியில், விஸ்வ நாதர் கோவில் - ஞான்வாபி மசூதி அமைந்துள்ள வளாகத்தில், தொல்பொருள் ஆய்வு மேற்கொள்ள, நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.உத்தர பிரதேசத்தில், முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான, பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இங்குள்ள வாரணாசி மாவட்ட நீதிமன்றத்தில், வழக்கறிஞர், வி.எஸ்.ரஸ்தோகி தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்த தாவது:வாரணாசியில், 2,000 ஆண்டுகளுக்கு முந்தைய காசி

வாரணாசி:வாரணாசியில், விஸ்வ நாதர் கோவில் - ஞான்வாபி மசூதி அமைந்துள்ள வளாகத்தில், தொல்பொருள் ஆய்வு மேற்கொள்ள, நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

உத்தர பிரதேசத்தில், முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான, பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இங்குள்ள வாரணாசி மாவட்ட நீதிமன்றத்தில், வழக்கறிஞர், வி.எஸ்.ரஸ்தோகி தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்த தாவது:வாரணாசியில், 2,000 ஆண்டுகளுக்கு முந்தைய காசி விஸ்வநாதர் கோவில், முகலாய மன்னர் அவுரங்கசீபால் இடித்து தள்ளப்பட்டது. அங்கு, மசூதி கட்டப்பட்டுள்ளது. இது வரலாற்றுப் பூர்வ மான உண்மை.

முகலாயர் ஆட்சி முடிந்த பின்,மசூதிக்கு அருகே, விஸ்வ நாதர் கோவில் புதிதாக கட்டப்பட்டது. அதனால், காசி விஸ்வ நாதர் கோவில், ஞான்வாபி மசூதி வளாகத்தை, ஹிந்துக்களிடம் ஒப்படைக்கப்பட வேண்டும்.அந்த வளாகத்தில், தொல்பொருள் ஆய்வு நடத்தினால், விஸ்வநாதர் கோவில் இருந்ததற்கான சான்றுகள் கிடைக்கும். அந்த வளாகத்தில் தான், கோவிலை இடிக்கும் போது இருந்த, விஸ்வநாதர் லிங்கமும் புதைக்கப்பட்டுள்ளது.இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டு இருந்தது.

தொல்பொருள் ஆய்வு மேற்கொள்ள, மசூதி நிர்வாகம் கடும் எதிர்ப்பு தெரிவித்தது. பல ஆண்டு களாக, இந்த வழக்கு விசாரணை நடந்து வந்தது.இந்நிலையில், விஸ்வ நாதர் கோவில் மற்றும் மசூதி வளாகத்தில், தொல்பொருள் ஆய்வு மேற்கொள்ள அனுமதி அளித்து, வாரணாசி மாவட்ட நீதிமன்றம் சமீபத்தில் உத்தரவிட்டுள்ளது. மேலும் இதற்கான செலவை, மாநில அரசு ஏற்க வேண்டும் என,உத்தரவிட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X