மடத்துக்குளம்:மடத்துக்குளம் பகுதியில், கொரோனா குறித்த விழிப்புணர்வு குறைந்து வருகிறது. இதனால் நோய் தொற்று பரவும்அபாயம் ஏற்பட்டுள்ளது.மடத்துக்குளம் தாலுகா பகுதியில், ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் உள்ளனர். இங்கு கொரோனா குறித்த விழிப்புணர்வு குறைந்து விட்டது.கணியூரில் நடக்கும் தினசரி கமிஷன் மண்டிகள், மடத்துக்குளத்தில் வாரச்சந்தை மற்றும் பஸ் ஸ்டாண்ட் நால்ரோடு, கொமரலிங்கம் பஸ் ஸ்டாப் உள்ளிட்ட இடங்களில் தினமும், பல ஆயிரக்கணக்கான மக்கள் கூடுகின்றனர்.ஆனால் இவர்களில், 90 சதவீதம் பேர்முகக்கவசம் அணிவது இல்லை. சமூக இடைவெளியையும் பின்பற்றுவது இல்லை. இதனால் நோய்த்தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. தற்போது தளர்த்தப்பட்ட ஊரடங்கு நடைமுறையில் உள்ளது.இன்னும் சில நாட்களில், கொரோனா பரவலை தடுக்க, நாளை (10ம் தேதி) முதல் பல்வேறு கட்டுப்பாடுகளை அரசு அறிவித்துள்ள நிலையில், மக்களின் அலட்சியம் கொரோனாவை வரவேற்பதாக உள்ளது.இதுகுறித்து, பொதுமக்கள் கூறியதாவது:கொரோனா மீண்டும் வேகமாக பரவுவதாக அரசு அறிவுறுத்தியுள்ளது. பல இடங்களில், இதன் தாக்கம் அதிகரித்துள்ளது. இதனால் முகக்கவசம் அணிவதும், சமூக இடைவெளியை பின்பற்றுவதும், கட்டாயமாக்கப்பட்டுள்ளது. ஆனால், பலர் இது குறித்த விழிப்புணர்வு எதுவுமின்றி அலட்சியமாக உள்ளனர். விசேஷங்கள் நிகழ்ச்சிகளுக்கு வாகனங்களில் கூட்டமாகச்செல்கின்றனர். இது நோய்த்தொற்று பரவுவதற்கு ஒரு வாய்ப்பாக அமைந்து விடும்.இதைத்தடுக்க, அரசுத்துறையினர் கொரோனா குறித்த விழிப்புணர்வுவை மக்களிடம் ஏற்படுத்தி முகக்கவசம் அணிவதையும், சமூக இடைவெளியை பின்பற்றுவதையும் கட்டாயமாக்க வேண்டும்.இவ்வாறு, தெரிவித்தனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE