பொது செய்தி

தமிழ்நாடு

போதிய வசதிகளில்லாத கிளை நூலகங்கள் : போட்டித்தேர்வுக்கு தயாராக போராட்டம்

Added : ஏப் 08, 2021
Share
Advertisement
உடுமலை;போட்டித்தேர்வுகளுக்கு தயாராக, அரசு நுாலகங்களுக்குச்செல்லும் தேர்வர்கள் அங்கு எவ்வித வசதிகளும் இல்லாததால், பாதிக்கும் நிலையை, மாவட்ட நுாலக ஆணைக்குழு மாற்ற வேண்டும்.உடுமலை பகுதியில், திருப்பூர் மாவட்ட நுாலக ஆணைக்குழு சார்பில், ஏழுக்கும், அதிகமான கிளை நுாலகங்கள் மற்றும் ஊர்ப்புற நுாலகங்கள் செயல்பட்டு வருகின்றன.இந்நுாலகங்களில், ஆண்டுதோறும் வாசகர்கள்

உடுமலை;போட்டித்தேர்வுகளுக்கு தயாராக, அரசு நுாலகங்களுக்குச்செல்லும் தேர்வர்கள் அங்கு எவ்வித வசதிகளும் இல்லாததால், பாதிக்கும் நிலையை, மாவட்ட நுாலக ஆணைக்குழு மாற்ற வேண்டும்.உடுமலை பகுதியில், திருப்பூர் மாவட்ட நுாலக ஆணைக்குழு சார்பில், ஏழுக்கும், அதிகமான கிளை நுாலகங்கள் மற்றும் ஊர்ப்புற நுாலகங்கள் செயல்பட்டு வருகின்றன.
இந்நுாலகங்களில், ஆண்டுதோறும் வாசகர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இருப்பினும், போதிய வசதிகள் மேம்படுத்தப்படவில்லை.கிராம மக்கள் தொடர் கோரிக்கை காரணமாக, உடுமலை, மடத்துக்குளம் தாலுகாவில், சில நுாலகங்கள் மட்டும் முழு நேர நுாலகமாக தரம் உயர்த்தப்பட்டன.ஆனால், புத்தகங்கள் ஒதுக்கீடு, கழிப்பிடம் உட்பட அடிப்படை வசதிகள் மேம்பாடு, இருக்கை வசதிகள் அதிகரித்தல் போன்ற முக்கிய கோரிக்கைகள் நிறைவேற்றப்படவில்லை. குறிப்பாக, நுாலகத்தை அதிகம் பயன்படுத்தி வரும் போட்டித்தேர்வுகளுக்கு தயாராகும் தேர்வர்களின், கோரிக்கைகளை மாவட்ட நுாலக ஆணைக்குழு கண்டுகொள்வதே இல்லை.தனியிடம் அவசியம்அரசு அறிவிக்கும் போட்டித்தேர்வுகளுக்கு தயாராகும் மாணவர்கள், இளைஞர்கள் மற்றும் பெண்களுக்கு, நுாலகத்தில் தனியிடம் ஒதுக்குவது அவசியமாகும். நகர்ப்புற நுாலகங்கள் சிலவற்றில் மட்டும், போட்டித்தேர்வர்களுக்கு, தனியாக இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. கிராமப்புற நுாலங்களில், தேர்வர்களின் நிலை பரிதாபமாகி விடுகிறது.
நாள்முழுவதும், குறிப்புகளை எடுக்க, பல இடங்களில், மாறி... மாறி... உட்கார வேண்டிய நிலை அவர்களுக்கு உள்ளது. பல்வேறு அரசு போட்டித்தேர்வுகளுக்கு, உடுமலை, மடத்துக்குளம் பகுதியில், ஆயிரக்கணக்கானோர் விண்ணப்பிக்கின்றனர். இவர்கள் தேர்வில் பங்கேற்க, அரசு நுாலகங்களை மட்டுமே நம்பியுள்ளனர். எனவே, அனைத்து நுாலகங்களிலும், போட்டித்தேர்வர்களுக்கு தனியிடம் ஒதுக்கி, தேவையான புத்தகங்களையும் அரசு ஒதுக்கீடு செய்ய வேண்டும்.
அனைத்து நுாலகங்களிலும், வாசகர் வட்ட கூட்டம் நடத்தும் போது, நுாலக ஆணைக்குழு சார்பில், ஒருவர் பங்கேற்றால், பிரச்னைகள் நேரடியாக தெரியவரும். இது குறித்து திருப்பூர் மாவட்ட நுாலக ஆணைக்குழுவினர் பரிசீலித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X