பொது செய்தி

தமிழ்நாடு

'ஐ.டி., துறை முடக்கிய சொத்தை அனுமதியின்றி விற்க முடியாது'

Added : ஏப் 08, 2021
Share
Advertisement
சென்னை:'வருமான வரித்துறை முடக்கிய சொத்துக்கள் மீது, எத்தனை ஆண்டுகள் ஆனாலும், அவர்களின் அனுமதி இல்லாமல், எந்த நடவடிக்கையும் மேற்கொள்ள முடியாது' என, அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.வருவாய்க்கு அதிகமாக சொத்து சேர்த்தோர், வருமான வரி செலுத்தாதோர் போன்றோரின் சொத்துக்கள், வருமான வரி சட்டப்படி முடக்கப்படும். எழுத்துப்பூர்வ கடிதம்அவ்வாறு முடக்கப்படும் சொத்துக்களை, வருமான

சென்னை:'வருமான வரித்துறை முடக்கிய சொத்துக்கள் மீது, எத்தனை ஆண்டுகள் ஆனாலும், அவர்களின் அனுமதி இல்லாமல், எந்த நடவடிக்கையும் மேற்கொள்ள முடியாது' என, அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

வருவாய்க்கு அதிகமாக சொத்து சேர்த்தோர், வருமான வரி செலுத்தாதோர் போன்றோரின் சொத்துக்கள், வருமான வரி சட்டப்படி முடக்கப்படும். எழுத்துப்பூர்வ கடிதம்அவ்வாறு முடக்கப்படும் சொத்துக்களை, வருமான வரித்துறை அனுமதி இல்லாமல், விற்பனை செய்யவோ, பதிவு செய்யவோ முடியாது.

இந்நிலையில், வருமான வரித்துறை முடக்கிய சொத்துக்களை, 30 மாதங்கள் கடந்த பின், பதிவு செய்வதற்கான பணிகளை மேற்கொள்ளலாம் என, தமிழக பதிவுத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக, தகவல் வெளியாகி உள்ளது.

மேலும், '30 மாதங்கள் முடிந்த பின், முடக்கப்பட்ட சொத்துக்களை விற்பனை செய்யக்கூடாது என, வருமான வரித்துறை, எழுத்துப்பூர்வ கடிதம் கொடுக்க வேண்டும்.அதற்கான காரணத்தை, அதில் தெரிவிக்க வேண்டும்; இல்லையெனில், முடக்கத்திற்கான அவகாசம் தானாக நீட்டிக்கப்படாது' என்றும் கூறிஉள்ளதாக தெரிகிறது.

இது குறித்து, வருமான வரி அதிகாரிகள் கூறியதாவது:வருமான வரி சட்டத்தை, மாநில அரசு வாயிலாக கொண்டு வரப்படும் அரசாணை அல்லது சட்டத் திருத்தங்களால் மாற்ற முடியாது. மத்திய அரசு மட்டுமே, அதற்கான சட்டத் திருத்தத்தை கொண்டு வர முடியும்.வழக்கு முடியவில்லை எனில், முடக்கப்பட்ட சொத்துக்களை விற்பனை செய்யவோ, பதிவு செய்யவோ முடியாது. நடவடிக்கைஅவ்வாறு செய்தால், அவர்கள் மீது, வருமான வரி சட்டப்படி, நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

எனவே, 30 மாதங்கள் முடிந்தால், முடக்கப்பட்ட சொத்துக்களை பதிவு செய்யலாம் என்ற தகவல் தவறானது.இவ்வாறு அவர்கள் கூறினர்.இது குறித்து, உயர் நீதிமன்ற வழக்கறிஞர் குமரகுரு கூறியதாவது:இந்த தகவல் முற்றிலும் தவறானது. வருமான வரி சட்டத்தில், மாநில அரசுக்கு எந்த உரிமையும் கிடையாது. வருமான வரி சட்டத்தில், பார்லிமென்டில் மட்டுமே திருத்தம் மேற்கொள்ள முடியும்.

மேலும், முடக்கப்பட்ட சொத்து மீதான வழக்கு முடிந்தால், வருமான வரி துறை அதிகாரி, சம்பந்தப்பட்ட பதிவாளருக்கு வழக்கின் முடிவை அனுப்புவார். வருமான வரித்துறை முடக்கிய சொத்தின் மீது, சம்பந்தப்பட்ட அதிகாரியின் முன் அனுமதி இல்லாமல், எந்த நடவடிக்கையையும், பதிவுத் துறை மேற்கொள்ள முடியாது.இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X