பொது செய்தி

தமிழ்நாடு

மதங்களை கடந்த நட்பு: சாவிலும் இணைபிரியாத நண்பர்கள்

Updated : ஏப் 09, 2021 | Added : ஏப் 08, 2021 | கருத்துகள் (12)
Share
Advertisement
பெரம்பலூர்: அரியலூர் அருகே இந்து,முஸ்லிம் மதத்தை சேர்ந்த இருவர், மதங்களை கடந்து நண்பர்களாக இருந்து, சாவிலும் இணை பிரியாமல், இருவரும் அடுத்தடுத்து உயிரிழந்தனர்.அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் ஜூப்ளி சாலை, அல்லா கோவில் அருகே வசித்தவர் மகாலிங்கம்,78.இவர், காளியம்மன் கோவில் பூசாரியாக இருந்ததுடன், அப்பகுதியில் டீக்கடையும் நடத்தி வந்தார். இவரது, வீட்டின் எதிர்புறம்
friends, Hindu, Muslim

பெரம்பலூர்: அரியலூர் அருகே இந்து,முஸ்லிம் மதத்தை சேர்ந்த இருவர், மதங்களை கடந்து நண்பர்களாக இருந்து, சாவிலும் இணை பிரியாமல், இருவரும் அடுத்தடுத்து உயிரிழந்தனர்.

அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் ஜூப்ளி சாலை, அல்லா கோவில் அருகே வசித்தவர் மகாலிங்கம்,78.இவர், காளியம்மன் கோவில் பூசாரியாக இருந்ததுடன், அப்பகுதியில் டீக்கடையும் நடத்தி வந்தார். இவரது, வீட்டின் எதிர்புறம் வசித்து வந்தவர் ஜெயினுலாபுதீன், 66. இவர், ரைஸ் மில் நடத்தி வந்தார்.

இவர்கள் இருவரும், இந்து, முஸ்லிம் என, வெவ்வேறு மதத்தை சேர்ந்தவர்களாக இருந்தாலும், 40 ஆண்டுகளாக நெருங்கிய நண்பர்களாக இருந்தனர். இருவரது இல்லங்களிலும் நடைபெற்ற, சுப, துக்க நிகழ்ச்சிகளில் தவறாமல் இருவரும் பரஸ்பரம் பங்கேற்றனர். வயது மூப்பின் காரணமாக, இருவரது உடல் நிலையும் பாதிக்கப்பட்டது.

கடந்த சில நாட்களாக இருவரும், ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் அடுத்தடுத்த படுக்கையில் சிகிச்சை பெற்றனர். இருவரும், நேற்று முன்தினம் மாலை, அரை மணி நேரத்துக்குள்ளாக அடுத்தடுத்து மரணம் அடைந்தனர்.

கடந்த, 40 ஆண்டுகளாக, மதங்களை கடந்து நண்பர்களாக பழகி வந்ததுடன், சாவிலும் இணைபிரியாத இவர்களுக்கு, இருவரது உறவினர்களும், அப்பகுதி மக்களும் கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினர்.

Advertisement
வாசகர் கருத்து (12)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Malick Raja - jeddah,சவுதி அரேபியா
10-ஏப்-202112:51:01 IST Report Abuse
Malick Raja மனித நேயம் ஒன்று மட்டுமே அடிப்படை அது இல்லாதோர் எந்த ஒரு மதத்திலும் இருக்கவே முடியாது .கூடாது என்பதும் உண்மை .. மனித நேயம் மனிதர்களுக்கு மட்டுமே .. விதிவிலக்கு மனித உருவில் விலங்கின அறிவு சொறிவுள்ளவர்களுக்கு மட்டும் ..
Rate this:
Cancel
ayyo paavam naan - chennai,இந்தியா
10-ஏப்-202107:30:07 IST Report Abuse
ayyo paavam naan சாவு என்பதே பிரிவு தானே? என்ன அது 'சாவில் கூட பிரியாத '? கஷ்டம் மரணம் வருத்தத்திற்குரியது தான் ஆனால் சில இரங்கல் களும் சுவரொட்டிகளும் சிரிப்பு வரவழைக்கிறது
Rate this:
Cancel
ayyo paavam naan - chennai,இந்தியா
10-ஏப்-202107:28:09 IST Report Abuse
ayyo paavam naan saavil ennayya privilladha natpu?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X