கோர்ட் செய்தி

தமிழ்நாடு

லஞ்ச ஒழிப்பு துறையின் சுதந்திரம் அரசுக்கு உயர் நீதிமன்றம் கேள்வி

Added : ஏப் 08, 2021
Share
Advertisement
சென்னை:'லஞ்ச ஒழிப்பு துறைக்கு, எந்த அளவுக்கு சுதந்திரம் வழங்கப்பட்டுள்ளது; மூன்று ஆண்டுகளில், எத்தனை ஊழல் வழக்குகளை, இந்த துறை கையாண்டுள்ளது' என, அறிக்கை அளிக்கும்படி, தமிழக அரசுக்கு, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.சோதனைசென்னை வில்லிவாக்கம், சார் - பதிவாளர் அலுவலகத்தில், லஞ்ச ஒழிப்பு போலீசார் நடத்திய சோதனையில், 70 ஆயிரம் ரூபாய் கைப்பற்றப்பட்டது.

சென்னை:'லஞ்ச ஒழிப்பு துறைக்கு, எந்த அளவுக்கு சுதந்திரம் வழங்கப்பட்டுள்ளது; மூன்று ஆண்டுகளில், எத்தனை ஊழல் வழக்குகளை, இந்த துறை கையாண்டுள்ளது' என, அறிக்கை அளிக்கும்படி, தமிழக அரசுக்கு, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


சோதனை

சென்னை வில்லிவாக்கம், சார் - பதிவாளர் அலுவலகத்தில், லஞ்ச ஒழிப்பு போலீசார் நடத்திய சோதனையில், 70 ஆயிரம் ரூபாய் கைப்பற்றப்பட்டது. இந்த சோதனை, 2018ல் நடந்தது. இதையடுத்து, சார் - பதிவாளராக இருந்த கோபாலகிருஷ்ணன், கன்னியாகுமரி மாவட்டத்துக்கு இடமாற்றம் செய்யப்பட்டார். பின், 2019ல், செங்கல்பட்டு மாவட்ட, சார் - பதிவாளராக நியமிக்கப்பட்டார். இந்த இடமாற்றத்தை ரத்து செய்யக்கோரி, கருப்பு எழுத்து கழகம் என்ற அமைப்பு, உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.

இம்மனு, தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அடங்கிய அமர்வில், விசாரணைக்கு வந்தது. குற்றச்சாட்டுகள் கடுமையாக இருக்கும் போது, நடவடிக்கை எடுக்கப்படவில்லையா என, நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.மேலும், 'அனைத்து மட்டங்களிலும் ஊழல் உள்ளது; புற்றுநோய் போல் பரவி உள்ளது; கடைசியில், இந்த நோய் நம்மை கொன்று விடும். நில அபகரிப்பு, நீர்நிலைகள் மாயமாவதற்கு, ஊழல் தான் அடிப்படை' என்றும், நீதிபதிகள் விமர்சித்தனர்.


உத்தரவு

இதையடுத்து, 'லஞ்ச ஒழிப்புத் துறை எப்படி இயங்குகிறது; மூன்று ஆண்டுகளில், எத்தனை ஊழல் வழக்குகளை கையாண்டுள்ளது; இந்த துறைக்கு எந்த அளவுக்கு சுதந்திரம் வழங்கப்பட்டுள்ளது' என, அறிக்கை அளிக்கும்படி, அரசுக்கு முதல் பெஞ்ச் உத்தரவிட்டது. விசாரணையை, மூன்று வாரங்களுக்கு தள்ளி வைத்தது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X