சிவகங்கை : சிவகங்கை மாவட்டத்தில் தொடர்ந்து கோடை வெப்பம்அதிகரிப்பு காரணமாக மக்கள் நடமாட்டம் குறைந்து, ரோடுகள் வெறிச்சோடி காணப்படுகிறது.
சிவகங்கை மாவட்டத்தில் பகலில் அதிகபட்சமாக 38 டிகிரி வெப்பம் காரணமாகஅனல் காற்று வீசுகிறது. மக்கள் பகல் நேரமாக காலை11:00 முதல் மாலை 3:00 மணி வரை வெளியில் நடமாடமுடியாத அளவிற்கு வெப்பம் தகிக்கிறது. வெளியில்மக்கள் நடமாட்டம் இல்லாமல் ரோடுகள் வெறிச்சோடிகிடக்கிறது.
வெப்பத்தின் பாதிப்பு காரணமாக பலவணிகர்கள் வியாபாரம் பாதித்துள்ளது. மக்கள்வீட்டை விட்டு வெளியேறாத நிலையில் வர்த்தகநிறுவனங்களில் வியாபாரங்கள் இல்லாமல் ஈ ஓட்டும்நிலை ஏற்பட்டுள்ளது. வெப்பக்காற்றின் காரணமாகவீடுகளுக்குள் முடங்கி கிடக்கின்றனர்.====
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE