பொது செய்தி

தமிழ்நாடு

பயறு வகை, எண்ணெய் வித்துக்கள்

Added : ஏப் 08, 2021
Share
Advertisement
சிவகங்கை : சிவகங்கை மாவட்டத்தில் கோடை சாகுபடியாக பயறு வகைகள், எண்ணெய் வித்து பயிர்கள் பயிரிடப்பட்டுள்ளன.சிவகங்கை மாவட்டத்தில் டிச., ஜன., மாதங்களில் பெய்தமழையின் காரணமாக தற்போது கண்மாய்களில் ஓரளவு நீர் இருப்பு உள்ளது. திறந்த வெளி கிணறுகள், ஆழ்துளைகிணறுகளில் நீர் மட்டம் உயர்ந்துள்ளது.இதை பயன்படுத்தி விவசாயிகள் இந்தாண்டு பயிறு வகை, நிலக்கடலை, ராகி போன்ற பயிர்களை பயிர்

சிவகங்கை : சிவகங்கை மாவட்டத்தில் கோடை சாகுபடியாக பயறு வகைகள், எண்ணெய் வித்து பயிர்கள் பயிரிடப்பட்டுள்ளன.

சிவகங்கை மாவட்டத்தில் டிச., ஜன., மாதங்களில் பெய்தமழையின் காரணமாக தற்போது கண்மாய்களில் ஓரளவு நீர் இருப்பு உள்ளது. திறந்த வெளி கிணறுகள், ஆழ்துளைகிணறுகளில் நீர் மட்டம் உயர்ந்துள்ளது.இதை பயன்படுத்தி விவசாயிகள் இந்தாண்டு பயிறு வகை, நிலக்கடலை, ராகி போன்ற பயிர்களை பயிர் செய்யலாம் என தெரிவிக்கப்பட்டது. ஒன்றியம் வாரியாக கண்மாய் நீர் இருப்பிற்கு ஏற்ப குறுகிய கால பயிரை சாகுபடி செய்யலாம். கண்மாயில் நீர் இருப்பு உள்ள பகுதிகளில் 50 ஏக்கரில் பயறு, இதர பயிர்கள் பயிர் சாகுபடிக்கான தொழில்நுட்ப பயிற்சிகள் அளிக்கப்படுகிறது.

கோடை கால பயிர் 1500 ஏக்கர் வரை சாகுபடி செய்யலாம் என தெரிகிறது. சிவகங்கை ஒன்றியத்தில் சுந்தரநடப்பு, மணக்கரை, துவங்கால் பகுதிகளில் சாகுபடி செய்யப்பட்டுள்ள உளுந்து, நிலக்கடலை, ராகி போன்ற பயிர் சாகுபடி பரப்பினை வேளாண் இணை இயக்குனர் வெங்கடேஸ்வரன், துணை இயக்குனர் பன்னீர் செல்வம் ஆய்வு செய்தனர். டி.ஏ.பி., தெளித்தல், நிலக்கடலைக்கு ஜிப்சம் இடுதல் போன்ற தொழில்நுட்பங்கள் குறித்து விளக்கம் அளித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X