திருப்புவனத்தில் வெறிநாய்களால் அச்சம்

Added : ஏப் 08, 2021
Share
Advertisement
திருப்புவனம் : திருப்புவனம் மற்றும் திருப்பாச்சேத்தியில் நாளுக்குநாள் வெறிநாய் தொல்லையால் பொதுமக்கள் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர்.திருப்புவனம், திருப்பாச்சேத்தியில் சுமார் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். போதிய பராமரிப்பின்றி தெருவில் திரியும் வெறிநாய்களால் பெண்கள், சிறுவர்கள், முதியோர்கள், வளர்ப்பு பிராணிகள் உள்ளிட்டோர் மிகுந்த

திருப்புவனம் : திருப்புவனம் மற்றும் திருப்பாச்சேத்தியில் நாளுக்குநாள் வெறிநாய் தொல்லையால் பொதுமக்கள் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர்.

திருப்புவனம், திருப்பாச்சேத்தியில் சுமார் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். போதிய பராமரிப்பின்றி தெருவில் திரியும் வெறிநாய்களால் பெண்கள், சிறுவர்கள், முதியோர்கள், வளர்ப்பு பிராணிகள் உள்ளிட்டோர் மிகுந்த சிரமத்திற்குள்ளாகின்றனர். ரோட்டில் செல்பவர்களை விரட்டி விரட்டி கடிப்பதால் பலரும் அச்சத்துடன் சென்று வருகின்றனர்.

திருப்பாச்சேத்தியில் நேற்று முன்தினம் வெறிநாய் கடித்ததில் காது துண்டாகி நான்கு வயது சிறுவன் சுதன் சிவகங்கை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். மேலும் ஆடு, கோழி, மாடு உள்ளிட்டவற்றையும் வெறிநாய்கள் கடிப்பதால் பொதுமக்கள் சிரமம் அடைகின்றனர்.எனவே மாவட்ட நிர்வாகம் திருப்புவனம், திருப்பாச்சேத்தியில் வெறிநாய்களை அப்புறப்படுத்த வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.

திருப்புவனம் கால்நடை டாக்டர் மோகன்தாஸ் கூறியதாவது, நாய்கள் உரிய பராமரிப்பின்றி வெறிநாய்களாக மாற வாய்ப்புகள் உண்டு. நாய்களுக்கு உரிய தடுப்பூசிகள் போட்டால் பிரச்னை இல்லை. தெரு நாய்கள் கடித்தால் ஆடு, மாடுகளுக்கு பத்து நாட்களுக்கு பிறகுதான் அறிகுறிகள் தெரியும். நாக்கில் உமிழ்நீர் வடிந்த வண்ணம் இருக்கும. எதை பார்த்தாலும் கடிக்கும். தடுப்பூசிகள் போடுவதின் மூலம் வளர்ப்பு பிராணிகளை காக்கலாம், என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X