பொது செய்தி

தமிழ்நாடு

அழகப்பா இன்ஜி., கல்லுாரியில் பேராசிரியர்கள் நுழைய தடை

Added : ஏப் 08, 2021
Share
Advertisement
காரைக்குடி : காரைக்குடி அழகப்பா அரசு இன்ஜி., கல்லுாரியில் நான்கு சட்டசபை தொகுதிக்கான ஓட்டு பெட்டிகள் வைத்துள்ள நிலையில், அங்கு பணிபுரியும் பேராசிரியர்களுக்கு போலீசார் தடை விதித்ததால், வாக்குவாதம் ஏற்பட்டது.சிவகங்கை, காரைக்குடி, திருப்புத்துார், மானாமதுரை (தனி) ஆகிய 4 சட்டசபை தொகுதிக்கான ஓட்டு பெட்டிகள், மே2ம் தேதி நடக்க உள்ள எண்ணும் பணிக்காக இக்கல்லுாரி வளாகத்தில்

காரைக்குடி : காரைக்குடி அழகப்பா அரசு இன்ஜி., கல்லுாரியில் நான்கு சட்டசபை தொகுதிக்கான ஓட்டு பெட்டிகள் வைத்துள்ள நிலையில், அங்கு பணிபுரியும் பேராசிரியர்களுக்கு போலீசார் தடை விதித்ததால், வாக்குவாதம் ஏற்பட்டது.

சிவகங்கை, காரைக்குடி, திருப்புத்துார், மானாமதுரை (தனி) ஆகிய 4 சட்டசபை தொகுதிக்கான ஓட்டு பெட்டிகள், மே2ம் தேதி நடக்க உள்ள எண்ணும் பணிக்காக இக்கல்லுாரி வளாகத்தில் வைக்கப்பட்டுள்ளன. இதற்காக மூன்று கட்ட போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளன. ஓட்டு எண்ணும் மையத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இதனால், உரிய ஆவணங்களின்றி யாரும் உள்ளே செல்ல அனுமதிக்கவில்லை.

இந்நிலையில், நேற்று அழகப்பா இன்ஜி., கல்லுாரியில் பணிபுரியும் பேராசிரியர், ஊழியர்கள் வழக்கம் போல் பணிக்கு சென்றனர். ஆனால், கல்லுாரி நுழைவு வாயில் பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் பேராசிரியர் உட்பட யாரையும் அனுமதிக்கவில்லை. இதனால், கல்லுாரி பேராசிரியர்கள், போலீசார்கள் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.காரைக்குடி தாசில்தார் அந்தோணிராஜ் நடத்திய பேச்சுவார்த்தையில், பேராசிரியர், ஊழியர்களுக்கு அடையாள அட்டை வழங்கிய பின், அனுமதிக்கப்படுவார்கள் என தெரிவித்ததால், கலைந்து சென்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X