சிவகங்கை : சிவகங்கையில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால், அரசு மருத்துவமனையில் கூடுதல் படுக்கைகள் அமைத்து சிகிச்சை அளிக்க முடிவு செய்துள்ளனர்.
தற்போது கொரோனாவின் வேகம் அதிகரித்து வரும் நிலையில், பாதித்தவர்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கின்றன. இம்மாவட்டத்தில் நேற்று வரை 203 பேர்கள் கொரோனா பாதித்து அதன் தன்மையை பொறுத்து அரசு மருத்துவமனை, வீட்டு தனிமையில் இருக்கின்றனர்.சுகாதாரத்துறை சார்பில் கொரோனா பாதித்தவர்கள் வசிக்கும் பகுதிகளை பாதுகாப்பு மண்டலமாக' அறிவித்து, அங்கு மற்றவர்கள் நுழைய தடை விதித்துள்ளனர்.
அத்தெருக்களில் கிருமிநாசினி, பிளீச்சிங் பவுடர் தெளித்து சுத்தம் செய்து வருகின்றனர். மேலும் வீட்டு தனிமையில் உள்ளோர் எக்காரணத்தை கொண்டும் வெளியில் செல்லக்கூடாது என எச்சரிக்கை விடுத்துள்ளனர். கொரோனா பாதித்து சிகிச்சைக்கு வருவோர் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், சிவகங்கை, காரைக்குடி, அமராவதிபுதுார் கொரோனா சிகிச்சை மையத்தில் கூடுதல் படுக்கை வசதிகளை ஏற்படுத்த கலெக்டர் மதுசூதன் ரெட்டி வலியுறுத்தியுள்ளார்.
சிவகங்கை அரசு மருத்துவமனை வரும் கொரோனா பாதித்தவர்களுக்கு 'சிடி ஸ்கேன்' எடுத்து முற்றிலும் 'ஸ்கிரீனிங்' செய்த பின்னரே பழைய மருத்துவமனையில் உள்ள கொரோனா சிறப்பு சிகிச்சை வார்டில் அனுமதிக்க வேண்டும். இதன் மூலம் கொரோனா பாதித்தவர்களின் உடலின் தன்மையை அறிந்து சிகிச்சை அளிக்கலாம் என தெரிவிக்கப்பட்டது. டீன் ரத்தினவேல், உதவி நிலைய மருத்துவ அலுவலர் முகமது ரபி, மருத்துவ இணை இயக்குனர் இளங்கோ மகேஸ்வரன், சுகாதார துணை இயக்குனர் யசோதாமணி ஆகியோரிடம் கொரோனாவிற்கு உரிய சிகிச்சை கிடைப்பதற்குரிய ஏற்பாட்டை செய்ய கலெக்டர் வலியுறுத்தினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE