காரைக்குடி : காரைக்குடியில் ரோட்டோரங்களில் குவிக்கப்படும் குப்பைகளில் தீ வைப்பதால், புகை மூட்டமாக இருப்பதால், வாகன ஓட்டிகள் தவித்து வருகின்றனர்.
காரைக்குடி நகராட்சி 36 வார்டுகளில் 1.40 லட்சம் பேர் வசிக்கின்றனர். நகரில் சேகரமாகும் குப்பைகளில் மக்கும், மக்காத குப்பைகளை தரம் பிரித்து உரம் தயாரிக்க வேண்டும். இதற்காக வீடு, வர்த்தக நிறுவனங்கள் தோறும் துாய்மை பணியாளர்கள் சென்று குப்பைகளை சேகரிக்க வேண்டும். தினமும் 48 டன் குப்பைகள் சேகரிக்கின்றனர்.
குப்பைகளை தரம் பிரித்து உரம் தயாரிக்க நகராட்சி நிர்வாகம் முனைப்பு காட்டவில்லை. இதனால், ரோட்டோரங்களில் குப்பைகளை கொட்டிவிட்டு, அதற்கு தீ வைத்து விடுகின்றனர். இதனால், ரோட்டில் புகை மண்டலமாக காட்சி அளித்து, வாகன ஓட்டிகளை சிரமத்திற்கு உள்ளாக்குகின்றன. இதனால் வாகன ஓட்டிகள் அடிக்கடி விபத்தில் சிக்குகின்றனர். நகராட்சி நிர்வாகம் ரோட்டோரம் குப்பைகளை எரிப்பதற்கு தடை விதிக்க வேண்டும்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE