பொது செய்தி

தமிழ்நாடு

ஆன்லைன் கல்வியில் மாணவர் சேர்க்கை

Added : ஏப் 09, 2021
Share
Advertisement
காரைக்குடி : காரைக்குடி அழகப்பா பல்கலை ஆன்லைன் கல்வி மாணவர்கள் சேர்க்கையை அதிகரித்துள்ளதாக, இப்பல்கலைக்கு சான்று வழங்கப்பட்டுஉள்ளது.தேசிய அளவிலான மேம்படுத்தப்பட்ட தொழில்நுட்பம் சார்ந்த கற்றல் அமைப்பு என்ற இணையவழி கற்றல் திட்டம் நடைமுறையில் உள்ளது. அதன்படி இப்பல்கலையில் 'ஸ்வயம்' என்ற இணைய வழி மூலம் 2017 முதல் ஆன்லைனில் மாணவர்களுக்கு கற்பிக்கப்பட்டு வருகிறது.

காரைக்குடி : காரைக்குடி அழகப்பா பல்கலை ஆன்லைன் கல்வி மாணவர்கள் சேர்க்கையை அதிகரித்துள்ளதாக, இப்பல்கலைக்கு சான்று வழங்கப்பட்டுஉள்ளது.

தேசிய அளவிலான மேம்படுத்தப்பட்ட தொழில்நுட்பம் சார்ந்த கற்றல் அமைப்பு என்ற இணையவழி கற்றல் திட்டம் நடைமுறையில் உள்ளது. அதன்படி இப்பல்கலையில் 'ஸ்வயம்' என்ற இணைய வழி மூலம் 2017 முதல் ஆன்லைனில் மாணவர்களுக்கு கற்பிக்கப்பட்டு வருகிறது. இந்த வெப்சைட்டில் மாணவர்கள் பாடங்களை தேர்வு செய்து கற்று வருகின்றனர்.

அந்த வகையில் அழகப்பா பல்கலையில் அதிக மாணவர்களுக்கு ஆன்லைன் கல்வி கற்பித்துள்ளதாக, தேசிய மேம்படுத்தப்பட்ட தொழில்நுட்பத்தில் கற்றல் அமைப்பு (என்.பி.டி.இ.எல்.,) சார்பில் இப்பல்கலைக்கு சாதனை சான்று வழங்கி உள்ளது. ஒருங்கிணைப்பாளர் பாஸ்கரன், திட்ட ஒருங்கிணைப்பாளர் ராமலிங்கம் ஆகியோரை துணைவேந்தர் ராஜேந்திரன் பாராட்டினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X