திருப்புத்துார் : திருப்புத்துாரில் சுகாதாரம் மற்றும் வசந்தப்பெருவிழா, பசுமைபாரதம் அமைப்பின் சார்பில் கொரோனா தடுப்பூசி முகாம் நடந்தது.
தற்போது இரண்டாவது அலையாக பரவிவரும் கொரோனா பாதிப்பைத் தடுக்க 45 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி முகாம் தொடங்கப்பட்டுள்ளது. வட்டார மருத்துவ அலுவலர் செந்தில்குமார் தலைமை வகித்தார். பசுமை பாரத அமைப்பு கவுரவ தலைவர் தங்கவேலு முன்னிலை வகித்தார்.மாவட்ட பூச்சியியல் வல்லுநர் ரமேஷ் தடுப்பூசி குறித்து விளக்கினார். மருத்துவ அலுவலர்கள் கணேஷ்குமார், சியாமலதா, சுகாதார மேற்பார்வையாளர் சகாய ஜெரால்ட்ராஜ் பங்கேற்றனர்.
இன்றும் காலை 10:00 மணி முதல் இன்பம் மகாலில் நடைபெறும் முகாமில் பொதுமக்கள் தடுப்பூசி போடலாம். பசுமை பாரதம் தலைவர் சிவசாமிகுமார், பொருளாளர் மீனாட்சிகுமார், செயலாளர் நாகசிதம்பரம் ஏற்பாட்டை செய்தனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE