பொது செய்தி

தமிழ்நாடு

தேவகோட்டையில் தீவிரமாகும் கொரோனா

Added : ஏப் 09, 2021
Share
Advertisement
தேவகோட்டை : கொரோனா இரண்டாம் அலை வேகமாக பரவி வருவதால், தேவகோட்டையில் அதிகளவில் பாதிக்கப்பட்டுவருகின்றனர். இருப்பினும் மக்கள் மாஸ்க் அணிவதை மறந்து பொது இடங்களில் திரிவதால், மேலும் பரவும் அச்சம் நீடிக்கிறது.இங்கு, ஏற்கனவே கொரோனாவிற்கு 30 பேர் பாதித்துள்ளனர். இந்நிலையில் நேற்று ஒரே நாளில் 6 பேருக்கு கொரோனா ஏற்பட்டது. ராம்நகர், கருதாவூரணி கிழக்கு, காந்தி ரோடு ஆகிய மூன்று

தேவகோட்டை : கொரோனா இரண்டாம் அலை வேகமாக பரவி வருவதால், தேவகோட்டையில் அதிகளவில் பாதிக்கப்பட்டுவருகின்றனர். இருப்பினும் மக்கள் மாஸ்க் அணிவதை மறந்து பொது இடங்களில் திரிவதால், மேலும் பரவும் அச்சம் நீடிக்கிறது.

இங்கு, ஏற்கனவே கொரோனாவிற்கு 30 பேர் பாதித்துள்ளனர். இந்நிலையில் நேற்று ஒரே நாளில் 6 பேருக்கு கொரோனா ஏற்பட்டது. ராம்நகர், கருதாவூரணி கிழக்கு, காந்தி ரோடு ஆகிய மூன்று பகுதிகள் தனிமைப்படுத்தப்பட்ட மண்டலமாக மாற்றி, பொதுமக்கள் செல்ல தடை விதித்துள்ளனர். தற்போது திருப்புத்துார் ரோட்டில் தனியார் பள்ளி எதிர்ப்புறம் உள்ள வீதியில் ஒரே குடும்பத்தில் மூன்று பேர் பாதித்து உள்ளதால் அப்பகுதியிலும் தடை விதித்துள்ளனர்.

இங்கு கொரோனா அதிகம் பரவும் சூழலில் மக்கள் மாஸ்க் அணிவதை மறந்து வருகின்றனர். பஸ்களில் கூட்டமாக வந்து செல்கின்றனர். நகராட்சியினர் அனைத்து வீதிகளிலும் கிருமி நாசினி தெளிக்க வேண்டும்.இது குறித்து வட்டார மருத்துவ அலுவலர் செல்வகுமார் கூறியதாவது, பாதிக்கப்பட்ட பகுதிகளில் மருத்துவ குழுவினர் ஆய்வு செய்கின்றனர். தொடர்ந்து கிருமி நாசினி தெளிக்கிறோம். மாஸ்க் அணியாதவர்களிடம் அபராதம் வசூலிக்கப்படுகிறது. இங்கு தினமும் 100 பேர்கள் வரை கொரோனா தடுப்பூசி போட்டு கொள்கின்றனர், என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X