திருப்புவனத்தில் நிற்காத அரசு பஸ்கள் | Dinamalar

திருப்புவனத்தில் நிற்காத அரசு பஸ்கள்

Added : ஏப் 09, 2021
Share
திருப்புவனம் : திருப்புவனம், திருப்பாச்சேத்தியை அரசு பஸ்கள் புறக்கணித்து புறவழிச்சாலையிலேயே செல்வதால் பொதுமக்கள் நீண்ட நேரம் பஸ்சிற்காக காத்துக்கிடக்க வேண்டிஉள்ளது.மதுரையில் இருந்து திருப்புவனம், திருப்பாச்சேத்தி வழியாக பரமக்குடி, கமுதி, ராமேஸ்வரம், சாயல்குடி உள்ளிட்ட பகுதிகளுக்கு ஏராளமான அரசு பஸ்கள் சென்று வருகின்றன. நான்கு வழிச்சாலை அமைக்கப்பட்ட பின்

திருப்புவனம் : திருப்புவனம், திருப்பாச்சேத்தியை அரசு பஸ்கள் புறக்கணித்து புறவழிச்சாலையிலேயே செல்வதால் பொதுமக்கள் நீண்ட நேரம் பஸ்சிற்காக காத்துக்கிடக்க வேண்டிஉள்ளது.

மதுரையில் இருந்து திருப்புவனம், திருப்பாச்சேத்தி வழியாக பரமக்குடி, கமுதி, ராமேஸ்வரம், சாயல்குடி உள்ளிட்ட பகுதிகளுக்கு ஏராளமான அரசு பஸ்கள் சென்று வருகின்றன. நான்கு வழிச்சாலை அமைக்கப்பட்ட பின் பஸ்கள் அனைத்தும் புறவழிச்சாலையிலேயே சென்று வருகின்றன. இதனால் பஸ்சிற்காக நீண்ட நேரம் காத்து கிடக்க வேண்டியுள்ளது. அரசு பஸ்கள் வராததால் தனியார் பஸ்களில் பொதுமக்கள் நெருக்கியடித்து பயணம் செய்கின்றனர். இரவில் அரசு பஸ்கள் புறக்கணிப்பதால் வெளியூர்களில் இருந்து வருபவர்கள் பெரிதும் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X