தமிழ்நாடு

கடந்த சட்டசபை தேர்தலை விட இத்தேர்தலில் ஓட்டுப்பதிவு குறைவு!

Added : ஏப் 09, 2021
Share
Advertisement
சிவகங்கை : கொரோனா அச்சம், பூத் சிலிப் முறையாக வழங்காததால் கடந்த சட்டசபை தேர்தலை விட இத்தேர்தலில் ஓட்டுப்பதிவு 1 சதவீதம் வரை குறைந்துள்ளன. 2016 தேர்தலில் 70 சதவீதமாக இருந்த ஓட்டுப்பதிவு, 2021 ல் 69 ஆக குறைந்துவிட்டன.சிவகங்கை, காரைக்குடி, திருப்புத்துார், மானாமதுரை (தனி) ஆகிய 4 சட்டசபை தொகுதியில், 2016 ல் நடந்த தேர்தலில் 7 லட்சத்து 54 ஆயிரத்து 343 ஓட்டுக்கள் பதிவு செய்தனர். இதன் மூலம் கடந்த

சிவகங்கை : கொரோனா அச்சம், பூத் சிலிப் முறையாக வழங்காததால் கடந்த சட்டசபை தேர்தலை விட இத்தேர்தலில் ஓட்டுப்பதிவு 1 சதவீதம் வரை குறைந்துள்ளன. 2016 தேர்தலில் 70 சதவீதமாக இருந்த ஓட்டுப்பதிவு, 2021 ல் 69 ஆக குறைந்துவிட்டன.

சிவகங்கை, காரைக்குடி, திருப்புத்துார், மானாமதுரை (தனி) ஆகிய 4 சட்டசபை தொகுதியில், 2016 ல் நடந்த தேர்தலில் 7 லட்சத்து 54 ஆயிரத்து 343 ஓட்டுக்கள் பதிவு செய்தனர். இதன் மூலம் கடந்த தேர்தலில் 70 சதவீத ஓட்டுக்கள் பதிவானது. இந்த தேர்தலில் வாக்காளர்களிடம் கொரோனா அச்சம் நிலவியது. மேலும், பூத் சிலிப்கள் முறையாக வாக்காளர்களுக்கு வழங்கப்படவில்லை.

அதே போன்று ஓட்டுச்சாவடிகள பிரித்ததால் வந்த குழப்பம் போன்ற காரணத்தால் ஓட்டு சதவீதம் குறைந்துவிட்டன. இதனால், 2021 சட்டசபை தேர்தலில் நான்கு தொகுதியிலும் ஓட்டுப்பதிவு 1 சதவீதம் குறைந்துவிட்டன. 2021 சட்டசபை தேர்தலில் நான்கு தொகுதியிலும் 8 லட்சத்து 19 ஆயிரத்து 354 பேர் ஓட்டளித்துள்ளனர்.

நான்கு சட்டசபை தொகுதியில் ஓட்டுப்பதிவு சதவீதம் 69 ஆக இருந்தன. கொரோனா விழிப்புணர்வுடன் வாக்காளர்கள் வந்து ஓட்டளித்திருக்கலாம். மேலும், குழப்பம் ஏற்படாத வகையில் வாக்காளர்களுக்கு பூத் சிலிப் முறையாக வழங்கியிருந்தால், ஓட்டுப்பதிவு சதவீதம் கடந்த தேர்தலை போல் வந்திருக்கும் என தேர்தல் அதிகாரிகள் தெரிவித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X