பொது செய்தி

தமிழ்நாடு

சி.எம்.டி.ஏ.,வுக்கு தேர்வான புதிய பணியாளர்கள் நீக்கம்?

Added : ஏப் 09, 2021
Share
Advertisement
சென்னை:சென்னை பெருநகர வளர்ச்சி குழுமமான, சி.எம்.டி.ஏ.,வில், நேரடி தேர்வு வாயிலாக தேர்ந்தெடுக்கப்பட்ட சிலரின் நியமன உத்தரவுகள் ரத்து செய்யப்பட்டதாக புகார் எழுந்துள்ளது.சி.எம்.டி.ஏ.,வின் பல்வேறு பிரிவுகளில், உதவியாளர், தட்டச்சர் உள்ளிட்ட பணியிடங்கள் நீண்ட காலமாக காலியாக உள்ளன. இவற்றை நேரடி தேர்வு வாயிலாக நியமிக்க முடிவு செய்து, அதற்கான நடவடிக்கைகளை, சி.எம்.டி.ஏ.,

சென்னை:சென்னை பெருநகர வளர்ச்சி குழுமமான, சி.எம்.டி.ஏ.,வில், நேரடி தேர்வு வாயிலாக தேர்ந்தெடுக்கப்பட்ட சிலரின் நியமன உத்தரவுகள் ரத்து செய்யப்பட்டதாக புகார் எழுந்துள்ளது.

சி.எம்.டி.ஏ.,வின் பல்வேறு பிரிவுகளில், உதவியாளர், தட்டச்சர் உள்ளிட்ட பணியிடங்கள் நீண்ட காலமாக காலியாக உள்ளன. இவற்றை நேரடி தேர்வு வாயிலாக நியமிக்க முடிவு செய்து, அதற்கான நடவடிக்கைகளை, சி.எம்.டி.ஏ., அதிகாரிகள் எடுத்தனர்.அந்த வகையில், 131 பணியிடங்களுக்கான நபர்களை தேர்வு செய்யும் பணிகள் நடந்தன.

எழுத்துத்தேர்வு, நேர்முக தேர்வு நடைமுறைகள் பிப்., 24ல் முடிக்கப்பட்டன. தேர்வானோருக்கு, தேர்தல் தேதி அறிவித்த நாளில் பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டு, அவர்கள் பணியில் சேர்ந்தனர்.இவ்வாறு பணியில் சேர்ந்த, உதவியாளர், தட்டச்சர் போன்ற சிலர், பணியில் இருந்து விடுவிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

இதில், பாதிக்கப்பட்ட சிலர் உயர் நீதிமன்றத்தை அணுகி உள்ளதால், சி.எம்.டி.ஏ.,வுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.முறையாக விண்ணப்பித்து, அனைத்து நடைமுறைகளிலும் தேர்ச்சி பெற்றவர் களை, பணியில் சேர்ந்தபின் எப்படி திருப்பி அனுப்பலாம் என்ற, கேள்வி எழுந்துள்ளது.பணி நியமனங்களை கவனித்த அதிகாரிகளின் குளறுபடியே இதற்கு காரணம் என்றும் கூறப்படுகிறது.

இது குறித்து, சி.எம்.டி.ஏ., உயரதிகாரி ஒருவர் கூறியதாவது: பணி நியமன நடவடிக்கைகளில், எழுத்துப்பிழை காரணமாக, சிலரின் பெயர் மாறியுள்ளது. இதனால், ஒருவருக்கு செல்ல வேண்டிய பணி ஆணை, வேறு நபருக்கு சென்று இருக்கலாம். இதை ஆராய்ந்து சரி செய்ததில், இந்த புகார் வந்திருக்கலாம். இதுகுறித்து விசாரித்து வருகிறோம்.இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X