பொது செய்தி

தமிழ்நாடு

சித்திரை திருவிழாவிற்கு தடை

Added : ஏப் 09, 2021
Share
Advertisement
மானாமதுரை : தமிழகத்தில் கொரோனா 2 வது அலை வேகமாக பரவி வருவதால் திருவிழாக்கள்,மதம் சார்ந்த கூட்டங்களுக்கு நாளை முதல் தடை விதித்துள்ளதால், மானாமதுரையில் சித்திரை திருவிழாவிற்கும் தடைவந்துள்ளதால் பக்தர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.தமிழகத்தில் கடந்தாண்டு பிப்., மாத இறுதியில் ஏற்பட்ட கொரோனா பாதிப்பு இந்தாண்டு வரை நீடித்து வருகிறது.மேலும் தற்போது கொரோனா 2 வது அலை வேகமாக பரவி

மானாமதுரை : தமிழகத்தில் கொரோனா 2 வது அலை வேகமாக பரவி வருவதால் திருவிழாக்கள்,மதம் சார்ந்த கூட்டங்களுக்கு நாளை முதல் தடை விதித்துள்ளதால், மானாமதுரையில் சித்திரை திருவிழாவிற்கும் தடைவந்துள்ளதால் பக்தர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.

தமிழகத்தில் கடந்தாண்டு பிப்., மாத இறுதியில் ஏற்பட்ட கொரோனா பாதிப்பு இந்தாண்டு வரை நீடித்து வருகிறது.மேலும் தற்போது கொரோனா 2 வது அலை வேகமாக பரவி வருவதை அடுத்து நேற்று தமிழக அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்தது. மானாமதுரையில் கடந்தாண்டு கொரோனா பரவல் காரணமாக சித்திரை திருவிழா நடக்கவில்லை. இந்த ஆண்டாவது நடக்கும் என பக்தர்கள் எதிர்பார்த்தனர்.

இந்நிலையில் நேற்று தமிழக அரசு திருவிழா, மதம் சார்ந்த கூட்டத்திற்கு தடைவிதித்தது. மானாமதுரை ஆனந்தவல்லி அம்மன் கோயிலில் சித்திரை திருவிழா தொடர்ந்து 10 நாட்கள் விமரிசையாக நடக்கும். கடந்த ஆண்டே நடக்காத நிலையில், இந்த ஆண்டு சிறப்பாக நடக்கும் என எதிர்பார்த்தனர். ஆனால், இந்த ஆண்டும் தடை விதித்ததால் பக்தர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X