பொது செய்தி

தமிழ்நாடு

45 வயதினர் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ளலாம்

Added : ஏப் 09, 2021
Share
Advertisement
ராமநாதபுரம் : கொரோனா அதிகரிப்பதால் 45 வயதிற்கு மேற்பட்டவர்கள் இரண்டு வாரத்திற்குள் தடுப்பூசி போட வேண்டும், என சுகாதாரத்துறை துணை இயக்குனர் பொற்கொடி தெரிவித்தார்.அவர் கூறியதாவது:தமிழகத்தில் கொரோனா இரண்டாவது தாக்கம் ஏற்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை எச்சரித்துஉள்ளது. பொதுமக்கள்பொது இடங்களில் கட்டாயம் முகக்கவசம் அணிந்து செல்ல வேண்டும்.தவறினால் அபராதம்

ராமநாதபுரம் : கொரோனா அதிகரிப்பதால் 45 வயதிற்கு மேற்பட்டவர்கள் இரண்டு வாரத்திற்குள் தடுப்பூசி போட வேண்டும், என சுகாதாரத்துறை துணை இயக்குனர் பொற்கொடி தெரிவித்தார்.

அவர் கூறியதாவது:தமிழகத்தில் கொரோனா இரண்டாவது தாக்கம் ஏற்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை எச்சரித்துஉள்ளது. பொதுமக்கள்பொது இடங்களில் கட்டாயம் முகக்கவசம் அணிந்து செல்ல வேண்டும்.தவறினால் அபராதம் விதிக்கப்படும்.பஸ்களில் இருக்கைகளில் மட்டுமே ஆட்கள் ஏற்ற வேண்டும். நின்று கொண்டு பயணிக்க அனுமதி இல்லை. திருவிழாக்கள், மதம் சார்ந்த கூட்டங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

சானிடைசர், சோப்பு கொண்டு கைகளை அடிக்கடி சுத்தம் செய்ய வேண்டும்.காய்ச்சல் முகாம்கள் நடத்தப்பட உள்ளது. பொதுமக்கள் முகாம்களில் பரிசோதனை செய்ய வேண்டும். 45 வயதிற்கு மேற்பட்டவர்கள் இரண்டு வாரங்களுக்குள் கட்டாயம் கொரோனா தடுப்பூசி போட வேண்டும். அனைத்து அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதாரநிலையங்கள், அங்கீகரிக்கப்பட்ட தனியார் மருத்துவமனைகளில் தடுப்பூசி போடலாம்.நோய் தொற்று அறிகுறி இருந்தால் அருகில் உள்ள அரசு மருத்துவமனைகளை அணுக வேண்டும்.இவ்வாறு கூறியுள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X