தமிழ்நாடு

அரசு தலைமை மருத்துவமனை இருளில் மூழ்கியிருப்பது தொடர்கிறது!

Added : ஏப் 09, 2021
Share
Advertisement
ராமநாதபுரம் : ராமநாதபுரம் அரசு தலைமை மருத்துவமனை மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையாக அறிவிக்கப்பட்டும் இருளில் மூழ்கியிருப்பது தொடர்கிறது. கண்டுகொள்ளாத நிர்வாகத்தால் நோயாளிகள் அச்சத்தில் உள்ளனர்.மருத்துவமனை நுழைவு வாசல் முதல் வளாகம் முழுவதும் மின் விளக்குகள் இன்றி எப்போதும் இருள் சூழ்ந்துள்ளது. இதுகுறித்து பலமுறை தினமலர்நாளிதழில் படத்துடன் பேனர் செய்தி

ராமநாதபுரம் : ராமநாதபுரம் அரசு தலைமை மருத்துவமனை மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையாக அறிவிக்கப்பட்டும் இருளில் மூழ்கியிருப்பது தொடர்கிறது. கண்டுகொள்ளாத நிர்வாகத்தால் நோயாளிகள் அச்சத்தில் உள்ளனர்.

மருத்துவமனை நுழைவு வாசல் முதல் வளாகம் முழுவதும் மின் விளக்குகள் இன்றி எப்போதும் இருள் சூழ்ந்துள்ளது. இதுகுறித்து பலமுறை தினமலர்நாளிதழில் படத்துடன் பேனர் செய்தி வெளியிடப்பட்டுள்ளது.செய்தி வெளியான அடுத்த சில நாட்களுக்கு மட்டும் நுழைவு பகுதியில் உள்ள ஹைமாஸ் விளக்கு எரிகிறது.

அதே நேரம் மெயின் நுழைவு வாசலில் ஓராண்டாக எரியாமல் காட்சிப் பொருளாக உள்ள இரண்டு சோடியம் விளக்குகளும் அப்படியே உள்ளன.இதனால் நுழைவுவாசலில் துவங்கி மருத்துவமனை வளாகமே இருளில் மூழ்கியுள்ளது.நுழைவு வாசலில் கால்நடைகள் நுழையாமல் தடுக்க அமைக்கப்பட்ட உருளை கம்பிகள் சேதமடைந்துள்ளன. சில இடங்களில் கம்பிகள் நோயாளிகளின் கால்களை பதம்பார்க்கும் வகையில் வெளியே நீண்டுள்ளன.

நுழைவு வாசல் இருளாக இருப்பதால் நோயாளிகள், ஆம்புலன்ஸ்கள் செல்லும் போது விபத்து அபாயம் உள்ளது. நோயாளிகள், உடன் தங்கியிருப்போர் இருளில் வாகன வெளிச்சத்தில் நடக்கின்றனர்.சமூகவிரோதிகள் அட்டகாசம்சமூக விரோதிகள், திருடர்கள், போதை ஆசாமிகளுக்கு இருள் சாதகமாக உள்ளது. இவர்கள் மருத்துவமனை வளாகத்திற்குள் குற்றங்களில் ஈடுபட்டு எளிதாக தப்புகின்றனர்.

ஒருவாரத்திற்கு முன் இது போன்ற இருளில் தான் இரண்டு கோஷ்டியினர் உருட்டு கட்டை, கத்தி உள்ளிட்ட ஆயுதங்களுடன் மருத்துவமனை வளாகத்தில் மோதிக்கொண்டனர்.இ துகுறித்து மருத்துவமனை சூப்பிரண்டு ஜவகரிடம் கேட்டால், எதற்கெடுத்தாலும் நேரில் வாருங்கள் என்கிறார்.டீன் அல்லியிடம் கேட்டால், அப்படியா.. என் கவனத்திற்கு வரவில்லையே, என்கிறார்.இருளில் மூழ்கியுள்ள மாவட்டத்தின் தலைமை மருத்துவமனைக்கு கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் ஒளி கொடுப்பாரா.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X