பொது செய்தி

தமிழ்நாடு

ராமநாதபுரம் வனரேஞ்சருக்கு சுவிட்சர்லாந்தின் சர்வதேச விருது

Added : ஏப் 09, 2021
Share
Advertisement
ராமநாதபுரம் : சுவிட்சர்லாந்தை தலைமையிடமாக கொண்ட பன்னாட்டு இயற்கை பாதுகாப்பு சங்கம் சார்பில், ராமநாதபுரம் வனத்துறை ரேஞ்சர் சதீஷ் சேவையை பாராட்டி சர்வதேச விருது வழங்கப்பட்டுள்ளது.சுவிட்சர்லாந்தை தலைமையிடமாக கொண்ட இவ்வமைப்பு உலக முழுவதும் வனப்பகுதிகளில் சிறப்பாக பணியாற்றிய 10 வனத்துறை ரேஞ்சர்களை தேர்ந்தெடுத்து அவர்களுக்கு சர்வதேச விருது வழங்குகிறது. நுாறு

ராமநாதபுரம் : சுவிட்சர்லாந்தை தலைமையிடமாக கொண்ட பன்னாட்டு இயற்கை பாதுகாப்பு சங்கம் சார்பில், ராமநாதபுரம் வனத்துறை ரேஞ்சர் சதீஷ் சேவையை பாராட்டி சர்வதேச விருது வழங்கப்பட்டுள்ளது.

சுவிட்சர்லாந்தை தலைமையிடமாக கொண்ட இவ்வமைப்பு உலக முழுவதும் வனப்பகுதிகளில் சிறப்பாக பணியாற்றிய 10 வனத்துறை ரேஞ்சர்களை தேர்ந்தெடுத்து அவர்களுக்கு சர்வதேச விருது வழங்குகிறது. நுாறு நாடுகளில் இருந்து 600க்கு மேற்பட்ட வனரேஞ்சர்கள் விண்ணப்பத்திருந்தனர்.

இதில் ராமநாதபுரம் மன்னார் வளைகுடா தேசியப் பூங்கா பகுதியில் கடல்வாழ் உயிரினங்களை பாதுகாக்கவும், அலையாத்திதி காடுகளை பாதுகாக்கவும் சிறப்பாக பணிபுரிந்த ராமநாதபுரம் வனரேஞ்சர்சதீஷ்க்கு, டேராடூனில் உள்ள இந்திய வனஉயிரின நிறுவனத்தின் அறிவியல் விஞ்ஞானி சிவக்குமார் சுவிட்சர்லாந்தின் சர்வதேச விருதுக்கு பரிந்துரைத்தார்.கொரோனா தொற்றின் காரணமாக சுவிட்லாந்தில் நடக்க இருந்த விருது வழங்கும் விழா நேற்று முன்தினம் இணையதளத்தில் நடந்தது.

இதில் ரேஞ்சர் சதீஷ்க்கு 'சேவ் தி ஸ்பீசீஸ்' என்ற பிரிவின் கீழ் சீருடையில்அணிந்து கொள்ள பிரத்யேக பேட்ஜ், ரூ.7.25 லட்சம் மதிப்பிலான (யுஎஸ்எஸ் டாலர் 10,000) பரிசுத்தொகை வழங்கப்பட்டது. விருதுபெற்ற சதீஷ்சை வனத்துறை அதிகாரிகள், அலுவலர்கள் உட்பட பலர் பாராட்டியுள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X