மந்தகதியில் தீ விபத்தில் சேதமடைந்த முதன்மை கல்வி அலுவலக கட்டடப்பணி

Added : ஏப் 09, 2021
Share
Advertisement
ராமநாதபுரம் : ராமநாதபுரம் பழைய கலெக்டர் அலுவலக வளாகத்திலுள்ள மாவட்டமுதன்மை கல்வி அலுவலகம் தீ விபத்திற்குஉள்ளாகி இரண்டு மாதங்கள்ஆகியும் செப்பனிடும் பணி ஆமை வேகத்தில் நடக்கிறது. போதிய இடவசதியின்றி இருமாடிகளில் தனித்தனியாக பணிபுரிந்து அலுவலர்கள் சிரமப்படுகின்றனர்.ராமநாதபுரம் பழைய கலெக்டர் அலுவலக வளாகத்திற்குள் முதன்மை கல்வி அலுவலகம் செயல்படுகிறது. ஜன.,21ல் தீ

ராமநாதபுரம் : ராமநாதபுரம் பழைய கலெக்டர் அலுவலக வளாகத்திலுள்ள மாவட்டமுதன்மை கல்வி அலுவலகம் தீ விபத்திற்குஉள்ளாகி இரண்டு மாதங்கள்ஆகியும் செப்பனிடும் பணி ஆமை வேகத்தில் நடக்கிறது. போதிய இடவசதியின்றி இருமாடிகளில் தனித்தனியாக பணிபுரிந்து அலுவலர்கள் சிரமப்படுகின்றனர்.

ராமநாதபுரம் பழைய கலெக்டர் அலுவலக வளாகத்திற்குள் முதன்மை கல்வி அலுவலகம் செயல்படுகிறது. ஜன.,21ல் தீ விபத்து காரணமாக கல்வி அலுவலகத்தில் இருந்த ஏராளமான ஆவணங்கள், நாற்காலிகள், மேஜைகள், கம்ப்யூட்டர்கள், மின்விசிறி, பிரின்டர் உள்ளிட்டவைகள் தீயில் எரிந்து சேதமடைந்தன. அதன்பிறகு முதல்தளம், இரண்டாம் தளத்தில் கல்வித்துறை அலுவலர்கள்தனித்தனியாக பணிபுரிகினறனர்.ராமநாதபுரம் மாவட்ட கல்வி அலுவலரின் அறையில் முதன்மை கல்விஅலுவலர் பணிபுரிகிறார். பெயரளவில் கம்ப்யூட்டர் இணைப்பு, மின்விசிறிகள் உள்ளதால் அலுவலர்கள் சிரமப்படுகின்றனர். கல்விப் பணிகள் தொடர்பாக மாவட்டத்தில் பல்வேறு தேவைக்காக வந்து செல்லும் பள்ளி நிர்வாகத்தினர், ஆசிரியர்கள் முதன்மை கல்விஅலுவலகத்தில் பணிபுரியும் கண்காணிப்பாளர்கள், நேர்முக உதவியாளர்கள் அறையை தேடவேண்டியுள்ளது.

இந்நிலையில் தீ விபத்தில் சேதமடைந்த முதன்மை கல்வி அலுவலககட்டடம் செப்பனிடும் பணி கடந்த 2 மாதமாக ஆமை வேகத்தில் நடக்கிறது. பழைய தளவாடப்பொருட்கள் அப்படியே வெளியே கிடக்கின்றன.ஆகையால் கட்டடத்தை செப்பனிட்டு புதுப்பிக்கும்பணியை விரைவில் முடிக்க வேண்டும், என ஊழியர்கள் வலியுறுத்தியுள்ளனர்.முதன்மை கல்வி அலுவலர் சத்தியமூர்த்தி கூறுகையில், 'இடமாற்றத்தினால் கல்விப்பணிகள்பாதிப்பில்லை,

வழக்கம்போல நடக்கிறது. தீ விபத்தில் சேதமடைந்த கட்டடத்தை புதுப்பிக்கும் பணிமுடியும் தருவாயில் உள்ளது. விரைவில் ஏற்கனவே செயல்பட்ட கீழ்தளத்திற்கு அலுவலகம் மாற்றப்பட உள்ளது,'என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X