பொது செய்தி

தமிழ்நாடு

சென்னை பல்கலை பட்டமளிப்பு விழா 1.38 லட்சம் பேர் பட்டம் பெற்றனர்

Added : ஏப் 09, 2021
Share
Advertisement
சென்னை:சென்னை பல்கலையில் நடந்த பட்டமளிப்பு விழாவில், 1.38 லட்சம் மாணவர்களுக்கு பட்டங்கள் வழங்கப்பட்டன.சென்னை பல்கலையின், 163-வது பட்டமளிப்பு விழா, பல்கலை வளாகத்தில் உள்ள நுாற்றாண்டு விழா அரங்கில் நேற்று நடந்தது. கவர்னர் பன்வாரிலால்புரோஹித் தலைமை யில் நடந்த விழாவில், மாணவர்களுக்கு பட்டங்கள் வழங்கப் பட்டன. சிறப்பு விருந்தினராக பங்கேற்ற, சென்னை ஐ.ஐ.டி.,யின் இயக்குனர்
 சென்னை பல்கலை பட்டமளிப்பு விழா 1.38 லட்சம் பேர் பட்டம் பெற்றனர்

சென்னை:சென்னை பல்கலையில் நடந்த பட்டமளிப்பு விழாவில், 1.38 லட்சம் மாணவர்களுக்கு பட்டங்கள் வழங்கப்பட்டன.

சென்னை பல்கலையின், 163-வது பட்டமளிப்பு விழா, பல்கலை வளாகத்தில் உள்ள நுாற்றாண்டு விழா அரங்கில் நேற்று நடந்தது. கவர்னர் பன்வாரிலால்புரோஹித் தலைமை யில் நடந்த விழாவில், மாணவர்களுக்கு பட்டங்கள் வழங்கப் பட்டன. சிறப்பு விருந்தினராக பங்கேற்ற, சென்னை ஐ.ஐ.டி.,யின் இயக்குனர் பாஸ்கர் ராமமூர்த்தி பேசியதாவது:

சர்வதேச அளவிலான செயல்பாடுகள், எதிர்காலத்தை கட்டமைத்தல் போன்றவற்றில், நாம் எப்படி பயணிக்க வேண்டும் என்பதை, இந்த கொரோனா தொற்று காலம் நமக்கு உணர்த்தியுள்ளது.இந்நிலையில், புதிய கல்வி கொள்கை விரைவில் அமலாக உள்ளது. மாணவர்களின் விருப்பத்துக்கு ஏற்ப பட்டங்களை பெறவும், கல்வி நிறுவனங்களை தேர்வு செய்யவும், அந்த கல்வி கொள்கை வழி வகுக்கும்.

உயர்கல்வியில் மாணவர் சேர்க்கை கணிசமாக அதிகரிக்கும்.மாணவர்கள் ஒரே நேரத்தில், எந்த கல்வி நிறுவனத்திலும் படிக்கலாம். வேறு, வேறு படிப்புகளை தேர்வு செய்யலாம். நேரடியாகவும், ஆன்லைனிலும் படிக்கலாம் என்பன போன்ற, பல்வேறு வாய்ப்புகள் நமக்கு கிடைக்க உள்ளன.தொழிற்துறையில் என்ன மாதிரியான வேலை வாய்ப்புகள் உள்ளனவோ, அவற்றுக்கு ஏற்ப படிக்க முடியும்.

ஆராய்ச்சி மாணவர்கள் குறிப்பிட்ட எல்லைகளை தாண்டி படிக்க, விரிவான வாய்ப்புகள் கிடைக்கும். முதுநிலை மட்டுமின்றி, இளநிலையிலும், ஆராய்ச்சிகள் அதிகரிக்கும். கல்வி நிறுவனங்களும், புதிய பட்டங்கள், படிப்புகளை தொடர்வதற்கான அங்கீகாரம் மற்றும் அனுமதி பெறும் முறையும் எளிதாகும்.எனவே, மாணவர்கள் பல்வேறு வரைமுறைகள், கட்டுப்பாடுகளை தாண்டி, விரிவான முறையில், எந்த நிறுவனத்திலும், எந்த படிப்பையும், எந்த இடத்திலும் படிக்கும் வாய்ப்பு உருவாக உள்ளது. அதை பயன்படுத்தி கொள்ள வேண்டும்.இவ்வாறு அவர் பேசினார்.

பட்டமளிப்பு விழாவில் நேரில், 872 பேர் உள்பட, 1.38 லட்சம் பேர் பட்டம் பெற்றனர். விழாவில், துணைவேந்தர் கவுரி வரவேற்றார்.கொரோனா கட்டுப்பாடு காரணமாக, தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி, பதிவாளர் உள்பட சிண்டிகேட் உறுப்பினர்கள் மேடையில் அமரவில்லை. மாணவர்கள் சமூக இடைவெளி விட்டு அமர்ந்து, பட்டங்களை பெற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X