பொது செய்தி

தமிழ்நாடு

பழம்பெரும் இயக்குனர் மருத்துவமனையில் அனுமதி

Added : ஏப் 09, 2021
Share
Advertisement
சென்னை:மூத்த இயக்குனர் எஸ்.பி.முத்துராமன், 86, கொரோனா அறிகுறியுடன், தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.சினிமாவில் சிவாஜி, ரஜினி, கமல் போன்ற பலருக்கு, 'கமர்ஷியல்' வெற்றியை கொடுத்தவர் எஸ்.பி.முத்துராமன்.கடந்த, 30 ஆண்டுகளாக, தொடர்ந்து கமர்ஷியல் வெற்றியை கொடுத்த அவர், 72 படங்களை இயக்கியுள்ளார். ரஜினி நடிப்பில் மட்டும், 25 படங்களை இயக்கி உள்ளார்.சமீப காலமாக,
 பழம்பெரும் இயக்குனர் மருத்துவமனையில் அனுமதி

சென்னை:மூத்த இயக்குனர் எஸ்.பி.முத்துராமன், 86, கொரோனா அறிகுறியுடன், தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.

சினிமாவில் சிவாஜி, ரஜினி, கமல் போன்ற பலருக்கு, 'கமர்ஷியல்' வெற்றியை கொடுத்தவர் எஸ்.பி.முத்துராமன்.கடந்த, 30 ஆண்டுகளாக, தொடர்ந்து கமர்ஷியல் வெற்றியை கொடுத்த அவர், 72 படங்களை இயக்கியுள்ளார். ரஜினி நடிப்பில் மட்டும், 25 படங்களை இயக்கி உள்ளார்.

சமீப காலமாக, சினிமா இயக்குவதை நிறுத்திய அவர், தொடர்ந்து சினிமா தொடர்பான நிகழ்ச்சிகளில் மட்டும் பங்கேற்று வந்தார்.நேற்று முன்தினம், தன், 86வது பிறந்த நாளை கொண்டாடிய அவர், நேற்று உடல் நிலை சரியின்றி, சென்னை கோடம்பாக்கம், 'மெட் வே' மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

லேசான கொரோனா அறிகுறி உள்ள நிலையில், மருத்துவரின் தீவிர கண்காணிப்பில் உள்ளார். இது தொடர்பாக, 'மெட் வே' மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்ட அறிக்கை: கொரோனா தொற்று அறிகுறிகளுடன், எங்கள் மருத்துவமனையில், எஸ்.பி.முத்துராமன் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரது உடல்நிலை சீராக உள்ளது. மருத்துவர்கள் தொடர்ந்து உடல்நிலையை கண்காணித்து வருகின்றனர்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X