முதுகுளத்துார் : முதுகுளத்துார் பகுதியில் மக்கள் அதிகம் கூடும் இடங்களில் அதிநவீன இயந்திரத்தின் மூலம் கிருமிநாசினி தெளிக்கப்படுகிறது.
தமிழகத்தில் தற்போது 2வது கட்டமாக கொரோனா பரவல் அதிகரித்துள்ள நிலையில் பொதுமக்கள் சமூக இடைவெளியை கடைபிடித்து முகக்கவசம் அணியவேண்டும். இதனையடுத்து தமிழக அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து உள்ளது. முதுகுளத்துார் பேரூராட்சி, சுகாதாரத்துறை சார்பில் பஸ் ஸ்டாண்ட், சந்தை வளாகம்,அரசு அலுவலகம், மருத்துவமனை உட்பட மக்கள் அதிகம் கூடும் இடங்களில் அதிநவீன இயந்திரத்தின்மூலம் கிருமிநாசினி தெளிக்கப் படுகிறது.
இதுகுறித்து பேரூராட்சி செயல் அலுவலர் மாலதி கூறியதாவது:முதுகுளத்துார் பகுதியில் சமூக இடைவெளி, முகக்கவசம் அணியாமல் வெளியிடங்களுக்கு வந்தால் ரூ.200 அபராதம் விதிக்கப்படும். கடைகள், சூப்பர் மார்க்கெட், ஜவுளி கடைகளில் அரசு அறிவித்துள்ள கட்டுபாடுளை மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். வீடுகளுக்கு சுகாதாரத்துறை பணியாளர்கள் நேரடியாக சென்று காய்ச்சல், கொரோனா அறிகுறிகள் ஏதும் இருக்கிறதா என்று ஆய்வு செய்கின்றனர்.முதுகுளத்துார் பகுதியில் கொரோனா பரவலை தடுப்பதற்கு பேரூராட்சி, சுகாதாரத்துறையினர் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்து வருகிறது, என்றார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE