முதுகுளத்துார் : முதுகுளத்துார் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் பதனீர் விற்பனை அமோகமாக நடந்து வருகிறது. வெளியூர்களில் இருந்து வந்து ஏராளமானோர் வாங்கி செல்கின்றனர்.
முதுகுளத்துார் பகுதி பனைத் தொழிலாளர்கள் பனை மரத்தை நம்பி வாழ்ந்து வருகின்றனர். பிப்ரவரி முதல் ஜூன் மாதம் வரை பதனீர் சீசன் தொடங்கியுள்ளதால் பனைத் தொழிலாளர்கள் முதுகுளத்துார் அதனை சுற்றியுள்ள பூங்குளம், கீழச்சாக்குளம், ஏனாதி, விளாத்திக்கூட்டம், வெண்ணீர் வாய்க்கால் உள்பட10க்கும் மேற்பட்ட கிராமங்களில் பதனீர் எடுக்க தொடங்கினர்.
மாலை நேரத்தில் முதுகுளத்துார்-கடலாடி செல்லும் சாலை பூங்குளம்,கீழச்சாக்குளம் கிராமங்களில் பதனீர் விற்பனை செய்யப்படுவதால்இதை சுற்றுவட்டார கிராமத்தினர் அதிகளவில் வாங்கி செல்கின்றனர்.இதுகுறித்து பதனீர் வியாபாரி கூறியதாவது:கோடை காலத்தில் மட்டும் பதனீர் சீசன் துவங்குகிறது. காலையில் பனையில் ஏறி சுண்ணாம்பு தடவி பாலையை சீவி முட்டி பனையில் கட்டி தொங்கவிட்டு பின்பு மாலை இறக்கப்படும். ஒவ்வொரு பனையிலும் 5 லிட்டர் முதல் 7 லிட்டர் வரை பதனீர் கிடைக்கிறது.
பதனீர் இயற்கை மருத்துவகுணம் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தி, உடம்புக்கு குளிர்ச்சி தருவது. நகர்புறத்தில் பதனீர் கிடைப்பது அறிது என்பதால் பனைத் தொழிலாளர்கள் குடங்களில் விற்பனைக்கு கொண்டு செல்கின்றனர்.ஒரு படி பதனீர் ரூ.30 விற்பனை செய்யப்படுகிறது. கடந்த ஆண்டு கொரோனா பாதிப்பால் சிரமப்பட்டு வந்த நிலையில் இந்த ஆண்டு பதனீர் அதிகமாக கிடைக்கிறது என்றார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE